‘பால்ய விவாகக்’ கொடுமைகள்

பெண்கள் சிறுமியாக இருக்கும் போதே திருமணம் செய்து விடும் ‘பால்ய விவாகம்’ எனும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் ‘இந்து சமூக வாழ்க்கை’ என்ற பெயரில் சமூகத்தில் திணித்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தக் கொடுமை பாhப்பனர் எதிர்ப்பையும் மீறி சட்டத்தால் தடுக்கப்பட்டது. பிறகு பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து, இந்தியாவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. என்றாலும், பார்ப்பனியம் திணித்த இந்த சமூகக் கொடுமை தொடரவே செய்கிறது.

உலகில் நடக்கும் ‘சிறுமிகள்’ திருமணங்களில் இரண்டாவதாக ‘பாரத புண்ணிய’ பூமியான இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 47 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறார்கள். உலகில் இதில் முதலிடம் பெறுவது வங்க தேசம். (66 சதவீதம்) இந்தியாவில் பீகார் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விடு கிறார்கள்.  ‘மூத்தவர்கள்’ (நுடனநசள) என்ற பெயரில் செயல்படும் சர்வதேச மனித நேய அமைப்பு ‘சிறுமிகள் – மணமகள் அல்ல’ என்ற முழக்கத் துடன் இந்தக் கொடுமையை நிறுத்தும் விழிப் புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது. நோபல் பரிசு பெற்ற அருட்தந்தை டெஸ்மோன்ட்துத்து அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மேரி ராபின்சன் உள்ளிட்ட குழுவினர் பீகார் வந்து பாட்னாவில் இளைஞர்களை சந்தித்துப் பேசினர். பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்யப்படுவதால் சந்திக்க வேண்டிய ஆபத்துகள், உடல்நலக் கேடுகள் பற்றி விரிவாக எடுத் துரைத்தனர்.

80 சமூக அமைப்புகளை உள்ளடக்கிய இந்த நிறுவனம் உலகம் முழுதும் சிறுமிகள் திருமணத் துக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது.‘

பெரியார் முழக்கம் 23022012 இதழ்

You may also like...