மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமாம்
“மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு தடையில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித் துள்ளார் (“னுடிநள nடிவ யெச யீநசளடிளே றாடி hயஎந சநடபைiடிரள கயiவா கசடிஅ தடிiniபே வாந யீயசவல”). மார்க்சிஸ்ட்டுகள் நாத்திகர்களாக இருந்தாலும், மதம் தோன்றி யதற்கான காரணம் சமூகத்தில் அதன் செயல்பாடு பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி ஏடுகள் மார்க்சிஸ்ட்டுகள், மதச் சடங்குகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், கட்சியின் செயல் பாடுகளில் மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. கேரளாவின் சி.பி.அய்.(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். மனோஜ், மத வழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால், தனது மத நம்பிக்கையை கைவிட முடியாது என்று, 2009 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து அவர் விலகினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவனந்த புரத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டை யொட்டி நிறுவப்பட்டிருந்த கண்காட்சியில் மார்க்ஸ், லெனின், சேகுவேரா படங்களோடு ஏசுவின் ஓவியமும் இடம் பெற்றிருந்தது. கல்கத்தாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது. மாநாடு வாயில் ஒன்றுக்கு இந்து மதத் தலைவர் விவேகானந்தர் படத்துடன் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
தொடரும்
பெரியார் முழக்கம் 23022012 இதழ்