திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

கழகம் சார்பாக திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் மூன்றாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் விழா 22.1.2012 காலை நடைபெற்றது. அலமேலு பாலாஜி மருத்துவமனை மருத்துவர் மனோகர் பொங்கல் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

முல்லை பெரியாறு நாயகன் கர்னல் பென்னிகுயிக் படத்திற்கு சு. துரைசாமி (மாவட்ட தலைவர்) மாலை அணிவித்து துவக்கி வைத்தார். க. அகிலன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இரவு 7 மணிக்கு முல்லைப் பெரியாறு சிக்கலும் தீர்வும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

கழகத் தோழர்கள் மாஸ்கோ நகர் சம்பூகன், விசயன், பாடகர் தியாகு, மாநகரச் செயலாளர் முகில்ராசு, கிளாகுளம் செந்தில், கோபிநாத், மாதவன், தம்பி, பாலு, நீதியரசன், சாமுண்டிபுரம் மூர்த்தி, தண்டபாணி, பெரியார் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாத் நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 08032012 இதழ்

You may also like...