நெடுமானூரில் கழகக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 12.2.2012  ஞாயிறு மாலை 6 மணியளவில் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நெடுமானூரில் நடைபெற்றது. தெ.செ. நாவாப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. திரு நாவுக்கரசு, பெரியசாமி, ரா. சிவராமன், ச. வசந்தகுமார் ஆகியோர் முன்னலை வகிக்க, ச.கா. இளையராசா வரவேற்புரையாற்றினார். செ. பிரபு, திருமால், நா.வெற்றிவேல், ந. அய்ய னார் ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக காவை இளவரசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நிகழ்த்தினார். விழுப்புரம் கணேசன், பெரியார் வெங்கட், கி.ஆசைத்தம்பி, க.இராமர், கல்லை சங்கர் உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அ.ரமேசு நன்றி கூறினார்.

விழுப்புரம், கடுவனூர் கிளை கழகத் தோழர்களால் உருவாக்கப் பட்டது திராவிடன் சடுகுடு குழு. 18.1.2012 புதன் அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 20 குழுவினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற அணியினருக்கு முதல் பரிசுத் தொகை ரூ.5000 – அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி ஆர்.செல்வி ராதாகிருஷ்ணனும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.4000 – ஊராட்சி மன்றத் தலைவர் ஆ.மல்லிகா இராசேந்திரனும், மூன்றாம் பரிசுத் தொகை ரூ.3000 – அ.தி.மு.க கிளை கழக செயலாளர் கே.சின்னக்கண்ணுவும், நான்காம் பரிசுத் தொகை ரூ.2000 – ஊராட்சி மன்ற உறுப்பினர் இரா. பழனிவேலுவும், ஆறுதல் பரிசை ம. செல்வராசும் வழங்கினார்கள். தி.சக்கர வர்த்தி, திராவிடன் குழுவினருக்கு நன்கொடை வழங்கினார். ரவி வர்மா, பி. சுப்ரமணியம் நடுவராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினர்.

 

பெரியார் முழக்கம் 08032012 இதழ்

You may also like...