நன்கொடை

4.12.2011 அன்று சேலம் கழகத் தோழர் இரா.வீரமணி – இலட்சுமி இணையரின் மகள் அருள்மொழி-ஸ்ரீதர் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தேறியது. விழா மகிழ்வாக ரூ.10,000/-, ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.

5.2.2012 அன்று சுவாமி மலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த தங்கள் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக கழகத் தோழர் சி.கோடிசுந்தரம்-கனிமொழி (எ) நா. சரசுவதி இணையர் ரூ.10,000/- நன்கொடையாக வழங்கினர்.

மணவிழா பதிவு

26.1.2012 அன்று கோபியில் கழக அலுவலகத்தில் சொக்கையா – மணிமேகலை வாழ்க்கை ஒப்பந்தப் பதிவு, பதிவாளர் மற்றும் கழகத் தோழர்கள் விசய சங்கர் (ஒன்றிய பொறுப்பாளர்), அர்ச்சுனன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), செகநாதன் மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் நடந்தது. கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

 

பெரியார் முழக்கம் 23022012 இதழ்

You may also like...