ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2
ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2 இடம் : இலங்கையில் இராவணன் கொலு மண்டபம். பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், மற்றும் அமைச்சர்கள், சேனா வீரர்கள், மந்திரி சபையினர். [நாட்டின் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.] மேகநாதன் : தந்தையே! அந்தத் தருக்கர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால், நாடு நாசகாரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் – விரைவிலே அந்த வீணர்களை ஒழிக்கத் திட்டம் தேவை! சேனாதிபதி : மன்னர் மன்ன! தமிழரசி, தங்கள் மூதாட்டி தடாதகை அம்மையார் தாக்கப்பட்ட போதே இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். கும்பகர்ணன் : கொலையும் வேள்வியும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்க முடியாது. கொடி போட்டு ஆளவும் திட்டம் இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா ! இராவணன் : உம்: ஆச்சர்யம்! சிங்கக் கூட்டத்திலே சிறு நரிகள்; செந்தாமரை ஓடையிலே முதலைகள் ; தமிழகத்திலே ஆரியர்கள் ! வேட்டைக்கு வேறு இடம் கிடைக்கவில்லை...
