சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

திருப்பூரில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 16.1. 2020 அன்று வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பக திடலில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருப்பூர் கழகத் தோழர் சரஸ்வதி பொங்கல் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை அமுதம் கணேசன், லட்சுமணன், தனபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை 6 மணிக்கு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. கிராமிய பாடல் களுக்கு விஷாலிகா, அனுஸ்ருதா, கீர்த்திகா, கீர்த்தனா, வரதன், வயிரவன், வேல் ஆகிய குழந்தைகள் நடனமாடினர். பாரதிதாசன் கவிதைகளை இளைய பாரதி பாடினார்.

பெரியாரை பற்றியும் நீட் தேர்வு அவலத்தைப் பற்றி யும் அறிவுமதி பேசினார்.  சிலம்பக் கலையை அறிவுமதி செய்து காட்டினார். பூங் குன்றன் திருக்குறளையும் பெரியார் பாடல்களையும் பாடினார். பெரியார் பாடல்களை யாழினியும் யாழிசையும் பாடினர்; பிரபாகரன் நடனம் ஆடினார்.  மேடை நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் நீதிராசன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் மேட்டுப்பாறை சுப்பராயன், வீரபாண்டி பகுதி திமுக செயலாளர்  முருகேசன், 40 வது வட்ட திமுக சீனிவாசன், 52வது வட்ட திமுக வேலுச்சாமி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை அரங்கசாமி, வீரபாண்டி பகுதி அதிமுக கதிர்வேல் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா வரவேற்புரையாற்றினார் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் குமார், கோவை மாவட்ட தி.விக தலைவர்  ராமசந்திரன்,  கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, சிவகங்கை மாவட்ட தலைவர் காரைக்குடி முத்து, தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சேர்ந்த சந்தோஷ், திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி, திவிக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு  ஆகியோர் உரையாற்றினர். விளையாட்டு போட்டிகளுக்கான பரிசினை வழங்கி  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு அய்யப்பன் நன்றியுரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அகிலன், விஜயகுமார், முத்துகுமார், இராசசிங்கம், இராமசாமி, சண்முகம், சண்.பாண்டியநாதன், கோவிந்தராசு, செம்பரிதி, கனல்மதி, சரண்யா.

பெரியார் முழக்கம் 23012020 இதழ்

You may also like...