Category: திருப்பூர்

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூரில் இல்லத் திறப்பு நிகழ்வு

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில்  கழகத் தோழர் மதன் இல்லத் திறப்பு விழா  20.01.2022 வியாழன் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலையில்  நடைபெற்ற இத்திறப்பு விழா எந்தவிதமான பார்ப்பனப் பண்பாட்டுச் சடங்குகள், மூட நம்பிக்கைகள் சார்ந்த நிகழ்வுகளும் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. குடும்பத்தின் குழந்தைகள் பெரியார் பிஞ்சுகள் மேகன் பிரபு, அஸ்வின் ஆகியோர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இல்லத் திறப்பின் மகிழ்வாக  மதன் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ1000/= (ரூபாய் ஆயிரம் மட்டும்) மாவட்டத் தலைவர் முகில்ராசுவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர அமைப்பாளர் முத்து , பரந்தாமன், விசய் – வீரலட்சுமி, மாரிமுத்து, அய்யப்பன், சந்தோஷ், சிரீசா, பிரபு-சுபாஷினி, கிஷோர், ஜெகன்-காயத்ரி, ராஜா, துரை, கௌரிசங்கர், திருமூர்த்தி, வினோத், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.  ...

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

கோமதி -ஆனந் பாபு ஆகியோரின் இணையேற்பு விழா 10.01.2022 அன்று  திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு தலைமையில் நடைபெற்றது. கழக மாநகர தலைவர் தனபால். மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து, திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திவிக சார்பில் கழகத் தோழர்கள்  நிகழ்வில் கலந்துகொண்டனர். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 3000/- வழங்கினர். மதியம் மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெண் வீட்டார் சார்பாக அம்மா கர்ப்பகவள்ளி, தாத்தா முருகன், மாமா நல்லமுத்து, தம்பி லிங்கேசுவரன் நண்பர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20012022 இதழ்

திருப்பூரில்  பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூரில் பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் வெற்றிமாறனின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா 07.01.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பொங்கு பாளையம் முத்துவின் இல்லமான  பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க வெற்றிமாறன் தனது பெற்றோர் உறவினர்களுடன் கேக் வெட்டினார். வெற்றிமாறனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் பிறந்த நாளில் தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில்  ‘விடுதலை’யின் குறியீடுகள் ‘பெரியார் – அம்பேத்கர்’ எனும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். வருகை தந்தோரை முத்து வரவேற்று உரையாற்றினார். திருப்பூர் ராமசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயிலரங்கை நடத்தினார். நிறைவாக...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்:  தோழர்களுடன் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர்...

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர்....

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

பா.ஜ.க.-இந்து முன்னணி அடா வடியை எதிர்த்து அனைத்துக் கட்சி களும் களத்தில் இறங்கும் நடவடிக்கை திருப்பூரில் தொடங்கி இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி பள்ளி நூலகத் திற்கு தன்னார்வலர் பெரியார் புத்தகங்களை கொடையாக வழங்கியதை எதிர்த்து பள்ளிக்கு அத்துமீறி நுழைந்து ஆசிரியர் களை மிரட்டிய பாஜகவினர் ! திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் முற்றுகையிட்டனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கினார். இதனை அறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை யில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளி வளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக் கூடாது...

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு ! 06.03.2021 அன்று திருப்பூரில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அரசு அதிகாரிகளுக்கு இது தெரியாததல்ல. தொடர்ந்து தெரிந்தே இத்தவறை செய்து வருகிறார்கள். தேர்தல் நடைத்தை விதிகள் என்று கூறிக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு பெரியார் சிலைகளை அரசு அதிகாரிகள் மூடுவதும், தோழர்கள் நீதிமன்ற தீர்ப்பை காட்டியபின் திரையை நீக்குவதும் என அரசு அதிகாரிகள் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தெரிந்தே இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் ? மக்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு காவி தீவிரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த அதிகாரிகள் அறியாமல்...

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

திருப்பூர் மாவட்டம் ஆத்துப் பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மதனின் ‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு விழா 18.02.2021, வியாழன் காலை 11.30 மணியளவில் நடை பெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக பகுத்தறிவுப் பாடல்களை து. சோ. பிரபாகர், பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோர் பாடினர். கழகப் பொருளாளர் துரைசாமி அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்  விற்பனையை தொடங்கி வைத்தார்.  கழக அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இயற்கை ஆர்வலர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திகழ்வில், திவிக கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, திருப்பூர் தெற்குப் பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், திராவிடர் இயக்கத்...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகர், பெரியார் திடலில் 12 ஆவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த விழாவில் பறை இசை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள், மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி, சிறுவர் பாடல்கள், தமிழிசைக்கு நடனங்கள் ஆகியவை சிறப்புடன் நடைபெற்றன. அப்பகுதி வாழ் பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு வரை பங்கேற்றனர். நிகழ்வுகள் காலை 9 மணி முதல் நிகர் பறை இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. முதலில் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பின்பு அதனைத் தொடர்ந்து 10.00 மணியளவில் குழந்தைகள் பெண்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் துவங்கி மாலை வரை நடைபெற்றது. மேடை நிகழ்வுகள் மாலை 6 மணி...

பெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்

பெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்

  திருப்பூரில் தற்போது பெரியார், அண்ணா சிலைகளை அதிமுக அரசு கூண்டமைத்து மறைத்துள்ளது. பெரியாரும்  அண்ணாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு திருப்பூரில் நடந்தது என்பதனை நினைவூட்டும் வகையில் பெரியாரும் அண்ணாவும் ஒன்றாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக் கும் இந்த சிலைகளை அதிமுக எடப்பாடி அரசு கூண்டு போட்டு மறைத்துள்ளது. எனவேதான் கூண்டு அமைக்கும் பணிகள் ஆரம்பித்த பொழுதே திராவிடர் விடுதலைக் கழகம் தன்னுடைய கடுமை யான கண்டனத்தைப் பதிவு செய்தது. காவல் துறை, வருவாய் துறையிடம் தங்களுடைய கண்டனத்தையும், கூண்டு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கழகத்தின் கோரிக்கையும் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி பெரியார், அண்ணா சிலைகளைப் பார்க்க முடியாமல் மறைத்து தமிழக அரசு கூண்டை முழுமையாக அமைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக...

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

கொரோனா ஊரடங்கில் இணையதளம் வழியாக இரண்டு கழகத் தோழர்களின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 01-06-2020, திங்கள் காலை 11:30 மணிக்கு ஹரிஷ்குமார் – ரூபஸ்ரீ ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். Team Link வாயிலாக இணையேற்பை நடத்தி வைத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தென்றல் நன்றி கூறினார். 27.08.2020 அன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமை அலுவலகத் தில் அருண்குமார்-சிவஜோதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடை பெற்றது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி தலைமை வகித்தார். பேரா சிரியர் சரஸ்வதி இணை யேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர்...

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகள் இனைந்து ஜாதி ஒழிப்பு கூட்டியக்கம் தொடங்கி அதன் வாயிலாக போராடி அவினாசி ஒன்றியம் பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததிய பகுதியில் வசித்து வரும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான லோகநாதன், த/பெ.முருகன் மாலதி ,த | பெ. முருகன் (இருவரும் அண்ணன் தங்கை) ஆகியோர் மீது ஜாதிய வன்மத்தை நடத்திய ஆதிக்க ஜாதியினர் மீது முதல் தகவல் அறிக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ~~~~~~~~~~~~~~~~~ 16.5.2020 ~~~~~~~~ திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததியர் பகுதியில் வசித்துவரும் முருகன் என்பவர் மகன் லோகநாதன், மகள் மாலதி, அவர்களது வீட்டில் இருந்து அருகில் உள்ள கல்லாங்காடு தோட்டத்தில் லோகநாதன் ஆட்டுக்குட்டி சென்று விட்டது, என்று சொல்லி கல்லாங்காடு தோட்டத்தின் உரிமையாளர் மூர்த்தியின் மகன் பிரவீன் என்பவர், ஆட்டுக்குட்டியை பிடித்துச் சென்று விட்டு ,கொடுக்க மறுத்திருக்கிறார் லோகநாதன் மாலதியும்...

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

NPR-NRC-CAA -க்கு எதிரான தொடர் மக்கள் தர்ணா போராட் டத்தில் 22.02.2020 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் இளைஞர்களின் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோடு CTC டிப்போ பின்புறம் உள்ள அறிவொளி சாலையில் பாஜக மோடிஅரசால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், NRC NPR-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து நடந்து வரும் தொடர் மக்கள் தர்ணா போராட்டத்தின் 7ஆவது நாளான 21.02.202 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத் தலைவர் CAA – NRC- NRP இன் அபாயம் குறித்து சிறப்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இசுலாமிய சகோதரர்களும், சகோதரிகளும், குழந்தைகளுடன் பங்கேற்று போராடி வருகிறார்கள். கழகத் தலைவருடன் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத்த லைவர் முகில்ராசு, இணைய தள பொறுப்பாளர் விஜய குமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக நிர்வாகிகள் அகிலன், தனபால்,...

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் பதினோராம் ஆண்டு தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாள் 26.1.2020 ஞாயிறு காலை 8 மணிக்கு மாஸ்கோ நகர் பெரியார் திடலில் நிகர் கலைக்குழுவினர் பறை முழக்கத் துடன் ஆரம்பித்தது. தமிழர் விழா, பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் தோழர் புல்லட் இரவி (அமமுக) பொங்கல் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேகர் (அதிமுக) தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் துரைசாமி தொடக்க உரையாற்றிய பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர் தலைவர் தனபால், செயலாளர் மாதவன் மற்றும் மாநகர் அமைப்பாளர் முத்து ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தினர். உடன் தமிழ்நாடு மாணவர் கழக நிர்வாகிகள் தோழர் சந்தோஷ் மற்றும் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர் சிறுவர்...

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

திருப்பூரில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 16.1. 2020 அன்று வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பக திடலில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருப்பூர் கழகத் தோழர் சரஸ்வதி பொங்கல் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை அமுதம் கணேசன், லட்சுமணன், தனபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை 6 மணிக்கு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. கிராமிய பாடல் களுக்கு விஷாலிகா, அனுஸ்ருதா, கீர்த்திகா, கீர்த்தனா, வரதன், வயிரவன், வேல் ஆகிய குழந்தைகள் நடனமாடினர். பாரதிதாசன் கவிதைகளை இளைய பாரதி பாடினார். பெரியாரை பற்றியும் நீட் தேர்வு அவலத்தைப் பற்றி யும் அறிவுமதி பேசினார்.  சிலம்பக் கலையை அறிவுமதி செய்து காட்டினார். பூங் குன்றன் திருக்குறளையும் பெரியார் பாடல்களையும் பாடினார். பெரியார் பாடல்களை யாழினியும் யாழிசையும் பாடினர்; பிரபாகரன் நடனம் ஆடினார்.  மேடை...

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....

திருப்பூரில் மகளிர் தின விழா !  கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம் மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா 09.03.2020 திங்கள்கிழமை மாலை 7.00 மணியளவில் திருப்பூர் குமரன் சாலை,நளன் உணவக அரங்கில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரின் பகுத்தறிவுப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தோழர் பார்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். கவிஞர் கனல்மதி அவர்கள் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் குறித்த விமர்சனஉரையாற்றினார். அடுத்து தோழர் விஜயகுமார் தோழர் ஆசிட் தியாகராஜனின் வாழ்வும் பணியும் குறித்து உரையாற்றினார். இந் நிகழ்வில் தோழர் ஆசிட் தியாகராஜன் அவர்களின் படத்தை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களின் படத்தை தோழர் சுசீலா அவர்களும், இனமானப் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார்கள். விளையாட்டுப் போட்டிகளில்...

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் NRC மற்றும் CAA  திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய மாநில அரசை வலியுறுத்தி 23.12.19 திங்கள் கிழமை தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம்  மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. பிரசாந்த்  (நகரச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.  தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கார்த்திகா, பவானி முன்னிலை வகித்தனர்.  தேன்மொழி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சம்சீர் அக்மத் (மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), முகமது சஹீத் (மாநில ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக மாணவர் பேரவை),  அஸ்லாம் (தமிழக மக்கள்  ஜனநாயக கட்சி)  ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலுக்கு எதிராக  கண்டன உரையை பதிவு செய்தனர். திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திருவள்ளுவர் பேரவை அருண், திவிக தோழர்கள்...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர்,  இயல்,  விஷ்ணு, பார்த்திபன் ...

திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்

திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று மாலை 6 மணிக்கு  நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக முடிவெய்திய தோழர் இராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர். கலைக் குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி, பிரசாந்த், தேன்மொழி, சந்தோஷ் ஆகியோரும் சட்ட எரிப்பு நாளைப் பற்றி பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய...

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 26112019  திருப்பூர்

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 26112019 திருப்பூர்

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – 26.11.2019 – திருப்பூர் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர்,15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று நடைபெற்றது. தோழர் சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக சமீபத்தில் முடிவெய்திய தோழர் ராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.தோழர் ராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு இணைய தளப் பொறுப்பாளர் விஜய்குமார் தலைமை வகித்தார்.மேட்டூர் TKR இசை குழுவினர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள். அதனை தொடர்ந்து நடந்த பொதுக் கூட்ட நிகழ்வில் கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாவட்ட தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி,பிரசாந்த், தேன்மொழி,சந்தோஷ் ஆகியோரும் உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்க...

கழகத் தலைவர் ஆறுதல் : திருப்பூர்  அகிலன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தலைவர் ஆறுதல் : திருப்பூர் அகிலன் தாயார் முடிவெய்தினார்

கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப் பாளர் தோழர் அகிலன்  தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்று குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழகப் பொருளாளர்  திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், உள்ளிட்ட தோழர்கள் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 28112019 இதழ்

இணையர் தேவை

இணையர் தேவை

இரா. மூர்த்தி; வயது : 50; மணமாகாதவர்; பத்தாம் வகுப்பு; மாத வருமானம் – ரூ. 20,000/-. பனியன் நிறுவனத்தில் தொழிலாளி; சொந்த வீடு; தனிநபர்; பெரியார் பணியில் ஆர்வமுடையவர். விரும்புவது : 40 வயதுக்கு மேற்பட்ட இணையர்.  குழந்தைகள் இருப்பது விரும்பத் தக்கது. இயக்கப் பணிக்கு குழந்தைகளுடன் வர ஈடுபாடு உடையவராக இருத்தல் நலம். தொடர்புக்கு : மூர்த்தி – 9843604153 (வி-எம்.) பெரியார் முழக்கம் 28112019 இதழ்

கழகத் தலைவர் தோழர் ஆறுதல்

கழகத் தலைவர் தோழர் ஆறுதல்

கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் தோழர் அகிலன் அவர்களின் தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வந்திருந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அப்போது கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் உடன் இருந்தனர்.

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில், பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரம் ! பறையிசையுடன்………. நாள் : 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ! தெருமுனை பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் : 1)கொங்கணகிரி 2)பாரதிநகர் 3)சாரதா நகர் 4)கிருஷ்ணா நகர் 5) மாஸ்கோநகர் நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மாவட்டம்.

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பிரச்சாரப் பயணத்தில் 4 நாட்களிலும் பெண் தோழர்கள் துண்டறிக்கை கொடுப்பது கடைகளில் வசூல் செய்வது என்று சிறப்பாக செய்தார்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளிடம் கருத்துகளை அதிகம் கொண்டு சேர்க்கப்பட்டது, திருப்பூர் அருள்புரம் பகுதி இந்து முன்னணி அதிகம் உள்ள பகுதி அங்கு நிறைய பேர் நிகழ்ச்சியை கேட்டார்கள்; புத்தகங்களும் வாங்கி சென்றார்கள், கோவை, செட்டிபாளையம், பனப்பட்டி, புதிய பகுதி எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நிகழ்வு நடந்தது, உடுமலை பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணம் செய்வேரிடம், ஒவ்வொரு பேருந்திலும் நிர்மல்குமார் கருத்துகளை சொல்ல தோழர்கள், முனியப்பன், கிருஷ்ணன் இருவரும் நிதி வசூல் செய்தார்கள். நல்ல வரவேற்பு இருந்தது 1 மணி நேரத்தில் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் வசூல் செய்தார்கள், காங்கேயம் பேருந்து நிலையத்தில் நிகழ்வு நடக்கும் போது இந்து முன்னணியைச் சேர்ந்த 4 – 5 பேர் வந்து வீடியோ எடுத்து...

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

28.9.2019 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக் கோட்டையை அடுத்த சிகரபள்ளி குமார் தோட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி  முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களை மாவட்டக் கழகச் செயலாளர் குமார் வர வேற்றுப் பேசினார். வாஞ்சிநாதன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர் தொடர்ந்து அலேசீபம் பழனி, நீலகிரி கிருஷ்ணன், உத்தனப்பள்ளி முனிராஜ், தாசனபுரம் சுப்பு, யூபுரம் மல்லேஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும், கழக செயல்பாட்டு திட்டங் களையும் குறித்து கருத்துக்களை முன் வைத்தனர். அவரைத் தொடர்ந்து கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு இரத்தினசாமி கழகத்தின் நிலைப் பாடுகள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எழுச்சியுடன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும், பெரியாரியல் கொள்கைகளை விளக்கியும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளை எடுத்துக் கூறியும்...

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம் தோழர் முத்துலட்சுமி அவர்கள் வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிபாளையம் மாநாட்டு தீர்மானத்தின் படி புதிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கை கிழித்தெரியும் போராட்டத்தை மாவட்ட தோழர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து அக் 2ஆம் தேதி சிறப்பாக நடத்துவது எனவும் அய்யா பெரியாரின் 141 வது பிறந்த நாள் விழாவை  நகரம் முழுவதும் கொடியேற்று விழாவாக அக் 9ஆம் தேதி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தோழர்கள் முத்துலட்சுமி, முத்து, நீதிராசன், முகில்ராசு, துரைசாமி, அகிலன், அய்யப்பன், தனபால், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயணத்தின் திருப்பூர் கோவை அணியின் ஒரே நிகழ்வாக வேட்டை காரன்புதூரில் பொதுக் கூட்டம் 26-8-2019 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் அரிதாசு தலைமையும் ஒன்றிய தலைவர் அப்பாதுரையும் முன்னிலை வகித்தனர். விழாவில் கழக பொருளாளர் துரைசாமி அவர்களும் செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன் அவர்களும் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி அவர்களும் சிறப்புரையாற்றினர் . விழாவில் முனைவர் சுந்தரவள்ளி அவர்களும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் பேருரையாற்றினர்.விழாவில் தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழக தலைவர் பெயர் சூட்டினார்.விழாவிற்கு தோழர் சபாகிரி நன்றியுரையாற்றினார். விழாவில் செயற்குழ உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்களும் கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களும் கோவை மாநகரத் தலைவர் நேருதாசு அவர்களும் கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் அவர்களும் ஆனைமலை...

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

விநாயகர் சதுர்த்தியின் போது கடை பிடிக்க வேண்டிய சட்ட நடை முறை கள் அடங்கிய விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் (திருப்பூர் மாவட்டம்) தோழர்களால் 19.08.2019 அன்று காலை 10 மணிக்கு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தொடர் புடைய அதிகாரிகளிடம் வழங்கி நடைமுறைபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் இராசு, முத்து, அய்யப்பன் ஆகியோர் சென்றிருந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சிலை அமைப்பது தொடர்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தின் (றுஞ சூடி 25586/2004. னுவ.17.09.2004) வழிகாட்டுதல்-தமிழக அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)துறையின் அரசாணை எண் 598, நாள் 09.08.2018 நிபந்தனைகளை விதி முறைகளை  செயல் படுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 21.08.2019  அன்று கோவை  மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

திருப்பூர்  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி உரிமை மீட்புப் பரப்புரையாக 3 நாள்கள் பொது மக்கள் பேராதரவுடன் நடத்தினர். கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் ஜூலை 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று நாள்கள் நடைபெற்றது. பரப்புரை பயணம் – கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்று! தமிழ்நாட்டில் நீட் தேர்வை விலக்கு! புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை திணிக்காதே !  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பயணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் 14.07.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, கழக பொருளாளர் துரைசாமி மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மாபாளையத்தில் முகில் இராசு தலைமையில் தெருமுனைக்...

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்த நிலையில், திராவிடர் விடுகலைக் கழகக் குன்னத்தூர் நகரப் பொறுப் பாளர் சின்னச்சாமி தலைமையில் தோழர்கள் 20.6.2019 அன்று குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். விநாயகர் சிலை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கோயில் கட்ட எழுப்பிய சுவரும் அகற்றப்பட்டு, காவல் நிலைய பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவும் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27062019 இதழ்

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

திருப்பூர் இராயபுரம் பகுதியிலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு துரோணாச்சாரி நினைவாக ‘துரோணா’ என்று பெயர் சூட்டப்பட் டுள்ளதற்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏகலைவன் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். துரோணாச்சாரி உருவம்போல் பொம்மை செய்து குருவாகக் கருதி வில்வித்தை கற்றார் என்பதற்காக அவரது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார் துரோணாச்சாரி என்று மகாபாரதம் கூறுகிறது. ‘சூத்திரன்’, அவர் ‘குலதர்மத்துக்கு’ எதிராக வில்வித்தை கற்கக் கூடாது என்பது இதன் தத்துவம். ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் மாநகராட்சிப் பள்ளிக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டுவது பச்சை வர்ணாஸ்ரம வெறிப்போக்காகும். இந்தப் பெயரை நீக்கக் கோரி, இராயபுரம் பகுதி மக்கள் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் த.பெ.தி.க., ம.தி.மு.க., பு.இ.ம., தி.மு.க. அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் இடம்...

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் வீரபாண்டி பிரிவு பொருளாளர் துரைசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராசர் பிறந்த நாள் விழாவையொட்டி ஜூலை 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி பல்லடத் திலும், 16ஆம் தேதி மடத்துக்குளம் பகுதி களிலும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தோழர்கள் துரைசாமி, முகில்ராசு, நீதிராசன், அகிலன், முத்து, தனபால், விஜயகுமார், அய்யப்பன், பரிமளராசன், சிவகாமி, முத்துலட்சுமி, கனல் மதி, பிரசாந்த், நஜ்முன்னிசா, பல்லடம்  கோவிந்தராஜ், சண்முகம், தேன்மொழி, மடத்துகுளம் மோகன், சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு இணையரின் மகன் சி.இரா. கதிர்முகிலன் – அ. நஜ்முன்னிசா ஆகியோரின் காதல், மத மறுப்பு மணவிழா 24.4.2019 காலை 11 மணியளவில் சிறப்புடன் நிகழ்ந்தது. அதே நாளில் சிவகாமி-முகில்ராசு இணையரின் புதிய இல்லத் திறப்பு விழாவும் சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசையோடு தொடங்கியது இல்லத் திறப்பு. இல்லத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். மணமக்களுக்கு பேராசிரியர் சரசுவதி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்வுக்கு கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். அவர் தமது உரையில் ஆசிரியர் சிவசாமியும் தோழர் முகில்ராசுவும் கழகத்துக்கு முழு நேரக் களப்பணியாளர்களாக தொண்டாற்றுவதையும் கழகத் தோழர்களுக்கு நெருக்கடி வந்தால், ஓடோடிச் சென்று உதவி வருவதையும் திருப்பூர் மாவட்டத்தில் கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து களப்பணியாற்றுவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டி செயல்படுவதையும்...

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

திருப்பூர் தொழிலதிபரும் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ்  நிறுவனருமாகிய லோகு, கழக கட்டமைப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சம் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். இந்தச் சிறப்பான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்பிரமணிக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 02052019 இதழ்

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் மகன் கதிர் முகிலனுக்கும், திருப்பூர் அப்துல் ஜப்பார் – சுபைதா பேகம் ஆகியோரின் மகள் நஜ் முன்னிசாவிற்கும் 3.4.2019 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் வாழ்க்கை இணையேற்பு நடைபெற்றது. இது மத மறுப்புத் திருமணமாகும். பெரியார் முழக்கம் 11042019 இதழ்

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18.03.2019 திங்கட்க்கிழமை, மாலை 4.00 மணியளவில், திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கினார். தோழர்கள் தோழர் பார்வதி ,தோழர் முத்துலட்சுமி,தோழர் தேன்மொழி,தோழர் சூலூர் தமிழ்செல்விஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன்,பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, தோழர் சபரி-தமிழ்நாடு மாணவர் கழகம்,விஜயகுமார் – இணையதள பொறுப்பாளர், முகில் இராசு – மாவட்ட தலைவர்,தோழர் பிரசாந்த் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழமை அமைப்புகளின் சார்பில் கண்டன உரையாற்றியவர்கள் : தோழர் முகமது அஸ்லாம்,மாவட்ட செயலாளர்,தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி,தோழர் அருண், திருவள்ளுவர்...

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

திருப்பூரில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! நாள் : 15.03.2019 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர். தமிழக அரசே ..! பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சியுள்ள உண்மை குற்றவாளிகளையும் உடனடியாக கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்! பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு ! இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! தலைமை : #தோழர்_சுசீலா_அவர்கள். முன்னிலை : #தோழர்கள்_பார்வதி_சங்கீதா_முத்துலட்சுமி_கோமதி. கண்டன உரை : #தோழர்_கொளத்தூர்_மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_திருப்பூர்_துரைசாமி, பொருளாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஈரோடு_ரத்தினசாமி, அமைப்புச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_முகில்ராசு, மாவட்டத்தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஆறுமுகம், மாட்டத்தலைவர்,திராவிடர் கழகம், #தோழர்_சண்_முத்துக்குமார், மாநகரத்தலைவர்,த.பெ.தி.க. #தோழர்_துரைவளவன், மாநில துணைச்செயலாளர்,வி.சி.க. #தோழர்_துரை,திருவள்ளுவர் பேரவை. #தோழர்_அபுதாஹீர்,எஸ்டிபிஐ. #தோழர்_அஸ்லம்,த.ம.ஜ.க....

திருப்பூர் மாஸ்கோ நகரில்  தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூரில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொருளாளர் துரைசாமி மற்றும் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர். 27.01.2019 ஞாயிறு அன்று  காலை 8.00 மணி முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி பெரியார் திடல், மாஸ்கோ நகரில் நடைபெற்றது காலையில் முதல் நிகழ்வாக பொங்கல்  வழங்கி மாவட்ட தலைவர் முகில்ராசு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன் மற்றும் மாநகர செயலாளர் மாதவன்   விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தினர் மாலை ‘விரட்டு” கலைக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடை பெற்றது. பகுத்தறிவு கருத்துகளை எளிய முறையில் நாடக வடிவில் மக்களிடம் பரப்பினர். நிகழ்வில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயில் காளை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாடல்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 10, 2019 அன்று திருப்பூர் இரயில் நிலையம் பெரியார்-அண்ணா சிலை அருகே மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்களுக்கு மூடு விழா நடத்திய மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல்பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டமைப்பு சார்பில் 330 தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளி யிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர்                                     செய்தி :  விஜய்குமார் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர் செய்தி – விஜய்குமார்