பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்
பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு !
06.03.2021 அன்று திருப்பூரில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
அரசு அதிகாரிகளுக்கு இது தெரியாததல்ல.
தொடர்ந்து தெரிந்தே இத்தவறை செய்து வருகிறார்கள்.
தேர்தல் நடைத்தை விதிகள் என்று கூறிக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு பெரியார் சிலைகளை அரசு அதிகாரிகள் மூடுவதும்,
தோழர்கள் நீதிமன்ற தீர்ப்பை காட்டியபின் திரையை நீக்குவதும் என அரசு அதிகாரிகள்
விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தெரிந்தே
இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் ?
மக்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு காவி தீவிரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த அதிகாரிகள் அறியாமல் இந்த தவறை செய்யவில்லை தெரிந்தே இதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இம்முறை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு செய்த அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அரசு அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கு நீதிமன்றத்திற்கு வந்து பதில் சொல்லட்டும்.இவர்களின் இந்த விளையாட்டை நாம் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்க முடியாது.
பெரியார் சிலையை மூடக்கூடாது என 2011ல் திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில்
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இணைப்பு :