பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள், சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் என்ற முழக்கத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் 16.10.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் துவங்கி தெருமுனை பரப்புரைக் கூட்டங் களாக மாலை வரை நடைபெற்றது.
தொடக்கமாக பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நடந்த பரப்புரைப் பயணத்திற்கு பல்லடம் நகர அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், செம்பரிதி, பழனிச்சாமி ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர் .
முதல் நிகழ்வில் ஒன்றிய அமைப் பாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். ராஜசிங்கம் நன்றி உரையாற்றினார்.
பரப்புரையின் இரண்டாவது நிகழ்வு 11 மணிக்கு வடுகுபாளையம் பகுதியில், பயணத்திற்கு பல்லடம் ஒன்றிய நகர அமைப்பாளர் கோவிந்த ராஜ் தலைமை வகித்தார்.
தி.மு.க பொறுப்பாளர் குட்டி பழனிசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகர செயலாளர் நிர்மல்குமார் கழகத்தின் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோர் உரையாற் றினர். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் முத்தமிழ் நன்றி கூறினார்.
பரப்புரையின் மூன்றாம் நிகழ்வு 12.30 மணி அனுப்பட்டி பகுதியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு செம்பரிதி தலைமை வகித்தார். கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் இயக்க பாடலை பாடி துவங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் பிரகாசு, கழகத்தின் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக சண்முகம் நன்றி கூறினார்.
நான்காம் நிகழ்வு கரடிவாவியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார், கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் இயக்கப் பாடலை பாடி துவங்கி வைத்தார், திலகவதி, திருப்பூர் மாவட்டத் தலைவர் ‘முகில் ராசு’ தமிழ் உணர்வாளர் செந்தேவன் ஆகியோர் உரையாற்றினர். சரஸ்வதி நன்றி கூறினார்.
அய்ந்தாம் நிகழ்வு பல்லடம் லட்சுமி மில் பகுதியில மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். திலகவதி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழகத்தின் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினார். இறுதியாக ராஜசிங்கம் நன்றி உரையாற்றினார்.
இந்த பரப்புரைப் பயணத்தில், கழகத்தின் பொருளாளர் சு.துரைசாமி,திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, அய்யப்பன், ராஜசிங்கம், மாரிமுத்து , மாநகர செயலாளர் மாதவன் , கோவை மாநகர செயலாளர் நிர்மல் குமார், கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராமசாமி, திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால், தோழர்கள் செம்பரிதி, கோவிந்தராஜ் சண்முகம், மோகன், சரஸ்வதி, முத்தமிழ், திலகவதி, கோவை மாவட்டம் நிலா, துளசி, பெரியார் பிஞ்சு யாழிசை, பிரணவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 20102022 இதழ்