Category: கோவை புறநகரம்

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள்  BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி பாரூக் எப்படி கொல்லப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? தமது அடுத்த கட்ட நகர்வு என்ன? ஃபாரூக் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன் என கூறினாரா? பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார். ( 28.03.2017 BBC TAMIL)

தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017

‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...

தோழர் கோவை ஃபாரூக் படுகொலை !

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கழகத் தலைவர் வலியுறுத்தல் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள். (கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கழகத் தலைவர் பேட்டி 17.03.17. கோவை.) நேற்று (16.03.2017)இரவு 11.00 மணிக்கு கோவை கழகத் தோழர் ஃபாருக் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மகளிர் தின விழா 📎கவியரங்கம் 📎ஆய்வரங்கம் 📎கலை நிகழ்ச்சிகள் 📎கருத்தரங்கம் சிறப்பரை- தோழர் கிரேஷ்பாணு தோழர் கொளத்தூர் மணி 19/03/2017 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்- அண்ணாமலை அரங்கம், இரயில் நிலையம் எதிரில் , சாந்தி திரையரங்கம் அருகில் .. கோவை. அனைவரும் வருக.

ஜாதி மதவாத கூட்டு வன்முறைக்கு எதிரான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 11032017

பொள்ளாச்சி அருகே காளியப்பன் புதூரில் இந்து மத சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட சாதி – மதவாத கூட்டு வன்முறைக்கெதிரான தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் 11032017 மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.. *தமிழக வாழ்வுரிமை கட்சி – நிறுவனர் தோழர் தி.வேல்முருகன் *ஆதித்தமிழர் பேரவை – பொ.செயலாளர் தோழர் நாகராசன் *தலித் விடுதலை கட்சி – தலைவர் தோழர் செங்கோட்டையன் *தமிழ் புலிகள் கட்சி – தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் *ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை – தலைவர் தோழர் ஆ.சு.பவுத்தன் *ஆதித்தமிழர் விடுதலை முன்னணி- அமைப்பாளர். தோழர் ரவிக்குமார் *SDPI –  தோழர் சாந் இப்ராகிம் *சமத்துவ கழகம் – தலைவர் தோழர் மு.கார்க்கி *தென்னை தொழிலாளர் சங்கம் தோழர் கருப்புசாமி ஆகிய தோழர்கள் கண்டனவுரை ஆற்றினர்…. *திராவிடர் கழகம் – பொதுகுழு உறுப்பினர் தோழர் பரமசிவம் பொறியாளர் *சமூக நீதிக் கட்சி – நிறுவனர் தோழர் பன்னீர் செல்வம் *மக்கள்...

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! கோவை 13022017

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி,மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கர் தலைவர் தோழர் கா.சு. நாகராசந்தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3-00 மணிவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆத்தி தமிழர்- பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ., சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், சமுத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர்முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தலைவர் தீனா,  கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்,...

பொள்ளாச்சி திவிக ஆர்ப்பாட்டம் 06022017

பொள்ளாச்சி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியாலூர் தழித்சிறுமி நந்தினியை பாலியல் செய்து கொலைசெய்த இந்து முண்ணனி காமுகனை கடுமையான தண்டனைச்சட்டம் இயற்றி நந்தினிக்கு நீதிகிடைக்கவேண்டும் எனறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .    

ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம். ******************* 31.01.17 செவ்வாய் மாலை 05 மணி. ஆதித் தமிழன் அரங்கம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை. தலைமை ———– தோழர் கொளத்தூர் மணி. தலைவர், (திராவிடர் விடுதலைக் கழகம்) முன்னிலை ————- தோழர் அதியமான் தலைவர், ( ஆதித் தமிழர் பேரவை ) சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இப்படிக்கு காசு.நாகராசன். #94439 33669

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூரில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட தோழர் காசு.நாகராசன் மற்றும் தோழர்களையும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு பின்னர் ஊரில் சேதமடைந்த பகுதிகளையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்… பேட்டி பார்க்க இங்கே சொடுக்கவும் பேட்டியில் காவல்துறை இரண்டு நாள் அவகாசம் அளிக்க கேட்டுள்ளனர் அதற்குள் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் காசு.நாகராசன் க்கு ஆதரவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.. பின்பு ஊரில் கூடியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் ஊரில் பொதுகூட்டமாகவே நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமுமுக, இந்திய ஜவ்ஹீத் ஜமாத் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் நாளை 10.01.17 “கண்டன ஆர்ப்பாட்டம்” ஜாதி வெறியர்களால் தோழர் கா.சு.நாகராசன் மற்றும் தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும், தப்பவிட்ட காவல்துறைமீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்துக்கட்சிகள்,அனைத்து சமுக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : தோழர் “கொளத்தூர்மணி” (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்) நாள் – 10.01.17,காலை -11.00மணி. இடம்: திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி அனைவரும் ஒன்றுபடுவோம் சாதிவெறியர்களுக்கு எதிராக ! பேச : 9842487766, 8344053307

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்  

தோழர் பாரூக் கோவையில் வரவேற்பு

75 நாள் சிறை வாசம் 23 சசிகுமார் கொலையினால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் கடைக்கு சென்ற திவிக தோழர் பெயர் பாரூக் என்ற ஒற்றை காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்ப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அடுத்த சிலதினங்களில் தோழர் மீது குண்டாஸ் பாய்ந்தது கடந்த மாதம் 8 ம் தேதி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சென்னையில் அறிவுரை குழுமத்தில் வாதாடினார் தோழருக்காக மட்டும் அல்லாமல் கோவையில் நடந்த கலவரத்தை அப்பட்டமாக்கினார் உடைந்தது குண்டாஸ் அனைவர் மீதும் தோழர் கலையரசன் வழக்குறைஞரால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பினையில் விடுதலை பெற்றார் தலைவருடன் தலைமைகழக அமைப்பாளர் இரத்தினசாமி தோழர்கள் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட தோழர்கள், ஈரோடு தோழர்கள் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கவிஞர்கனல்மதி, திருப்பூர் முகில்ராசு, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருந்த தோழர் நங்கவள்ளி கிருஷ்னன் ,திருசங்கோடு வைரவேல் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர்...

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கோவையில் 22.9.2016 அன்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் டி.சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை நகர் முழுதும் கலவரம், தீ வைப்பு, உடைமைகளை அழிப்பது என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். இதற்காக தமிழகம் முழுதுமிருந்தும்  ஆட்கள் அழைக்கப்பட்டனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அப்போது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பாரூக், குழந்தைக்கு பால் வாங்க வந்தபோது கலவரக்காரர்கள் சூறையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. காவல்துறை ‘இந்து அமைப்பைச் சார்ந்த சிலரையும், இ°லாமியர்கள் சிலரையும் கணக்கு காட்ட கைது  செய்தது. அதில் பால் வாங்க வநத தோழர் பாரூக்கையும் கைது செய்து பின்பு அவர் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியது. அதைத் தொடர்ந்து குண்டர் சட்ட விதிமுறை யின் கீழ் நவம்பர் 8ஆம் தேதி சென்னையிலுள்ள அறிவுரை குழுமத்தின் முன்பு பாரூக் நேர் நிறுத்தப் பட்டார். குண்டர் சட்டத்தில்...

மத சார்ப்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைப்பதும் , ஆயுத பூஜை செய்வதும் சட்டப்படி குற்றமாகும் – பொள்ளாச்சி ஆனைமலை

திராவிடர் விடுதலைக் கழகம்- பொள்ளாச்சி & ஆனைமலை பகுதியில் மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும் ஆயுதபூஜை வழிபாடு நடத்துவதும் சட்ட விரோதமாகும் என்றும், அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே என்றும் கழகத் தோழர்களின் பதாகை மற்றும் சுவரொட்டிகள்  

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...

பெரியார் பிறந்தநாள் விழா ஆனைமலை

தலைவர்பெரியாரின் 138-வதுபிறந்தநாள் விழா ஆனைமலையில் கழகதோழர்களால் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சமத்துவபுரத்தில் பெரியார்சிலைக்கு மாலைஅணிவித்தனர். கழககொடியை புனிதா, கீதாஆகிய தோழர்கள்ஏற்றி வைத்தனர். பின்பு பெரியார்படத்திறப்பு நிகழ்வு நடந்தது. விழாவில்பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் காசு.நாகராசு. அம்பேத்கர்இளைஞர் முன்னணி தலைவர்   கவி.மணிமாறன் மற்றும்கழகத்தோழர்கள் வே.வெள்ளிங்கி, ராசேந்திரன், அப்பாதுரை, அரிதாசு, மணிமொழி, ஆனந்த், கணேசு, முருகேசன் உள்படதோழர்கள் 75பேர்கலந்து   கொண்டனர். மதியம் மாட்டுக்கறி விருந்தில் பொதுமக்கள்என 200பேர்பங்கேற்றனர்

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.”

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.” கழக தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். நாள் : 18.09.2016 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: நல்லாயன் திருமண மண்டபம், டவுன் ஹால், கோவை.

விநாயகர் சிலை ஊர்வலம் – ஆனைமலை திவிக மனு

​பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 5ம் தேதி இந்துமத வெறியர்களால் மற்ற சமூகத்தாரின் வன்மத்தை தூண்டுவது போல் சென்னை உயர் நீதி மன்றம் பிறப்பித்த விதிகளுக்கு மாறாக செயல்படுவதை கண்டித்தும் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துகின்ற நீர் நிலைகளில் கரைப்பதும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும் காவல்துறைகளின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதை கண்டித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் 20க்கும் மேற்பட்ட தோழர்களால் மனு வழங்கப்பட்டது  

கோவை திவிக சார்பில் மனு

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காமல் தடுக்க கோரி 25-08-2016 (வியாழக்கிழமை ) காலை 11:00 மணியளவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிபாளர், இந்து சமய அறநிலையத்துறை, மசுகட்டுபாட்டு வாரியம், கோவை மாநகராட்சி, ஆகியோருக்கு கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மனுவாக வழங்க பட்டது. தோழர்நேருதாஸ் தலைமையில் , நிர்மல்குமார் செயலாளர், இராமச்சந்திரன் புறநகர் மாவட்ட தலைவர், சூலூர்பன்னீர்செல்வம் சூலூர் ஒன்றியம் , மாநகர அமைப்பாளர்ஜெயந்த், பொருளாளர் கிருஷ்ணன், வடவள்ளி ஸ்டாலின், விக்னேஷ், சித்தன், சங்கர்,  அன்ட்ரோஸ், கணேஷ், வெங்கட், விஜயபாரதி, கனி ஆகிய மாவட்டகழக பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர் திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டம் பேச: 9677404315

குலக்கல்வியை மீண்டும் திணிக்கும், ”புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு”

இந்திய அரசின் துணையுடன் காவி பயங்கரவாத அரசியல் நமது கல்வி, உணவு, பண்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இயக்கங்களின் ஒன்றிணைந்த முயற்சிகளை முன்னெடுக்க கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ ) மக்கள் விடுதலை(தமிழ்நாடு) ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் 15.08.16 அன்று பிற்பகல் கோவை மாவட்டம் சூலூரில் தோழர் ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் – தோழர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் – தோழர் தியாகு, சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை – தோழர் பாலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி – தோழர் தமிழ்நேயன், பி.யூ.சி.எல் – தோழர்கள் குறிஞ்சி, பொன்.சந்திரன், தனலட்சுமி, சி.பி.ஐ ( எம்-எல் ) ரெட்ஸ்டார் – தோழர் குசேலர், தியாகி இம்மானுவேல் பேரவை – தோழர் புலிப் பாண்டியன், தமிழக மக்கள் முன்னணி – தோழர் அரங்க.குணசேகரன், தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி...

திருப்பூர் அணியின் பயண பரப்புரை தொகுப்பு

090816 செவ்வாய்   காலை 1030 மணி கிணத்துக்கடவு தலைமை நிர்மல் குமார்தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர் தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள் வாழ்த்துரை  தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள் இயக்க பாடல் தோழர்கள் .சங்கீதா உக்கடம் கிருட்டிணன் அவர்கள், தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர் பொள்ளாச்சி நகரம் தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர் தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர். நன்றியுரை தோழர்  வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன் தமிழ்பித்தன் வெள்ளக்கிணறு மருதகனி கொண்டம்பட்டி செல்வராசு வடவள்ளி ஒவியர் தமிழேந்தி மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி மாலை 0415க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தலைமை பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர...

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !

பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில் கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு, கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ! ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர்...

ஜாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு – கோவை 17042016

கோவையில், ”ஜாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு” நாள் : 17.04.2016 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. இடம் : அண்ணாமலை அரங்கு, தொடர்வண்டி நிலையம் எதிரில், சாந்தி திரையரங்கு அருகில்,கோவை. ”ஜாதி ஒழிப்பும்,ஜனநாயக கடமைகளும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மற்றும் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்ற உள்ளார்கள். நிகழ்சி ஏற்பாடு : ஜாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம்,தமிழ்நாடு.

பெரியார் நடத்திய போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலை பொதுக்கூட்டம் – 05032016 – நிழற்படங்கள்

பொள்ளாச்சி ஆனைமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பொதுக்கூட்டம் ! ”பெரியார் நடத்திய போராட்டங்களும்,தமிழர்கள் அடைந்த பலன்களும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு தோழர் அரிதாசு அவர்கள் தலைமை தாங்கினார்.தோழர்கள் அப்பாதுரை,இரா.ஆனந்த்,விவேக்சமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு ரத்தினசாமி,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி,தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,மடத்துக்குளம் மோகன்,நேருதாசு,நிர்மல், வே.வெள்ளியங்கிரி, த.ராஜேந்திரன்,சீனிவாசன்,யாழ்மணி,மணிமொழி,சுந்தரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பள்ளத்தூர் நாவலரசு – மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப்பாடல்கள் இடம்பெற்றன. தோழர் கோ.சபரிகிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

உடுமலை – பேராசிரியர் இந்திரஜித் நினைவேந்தல் – நிழற்படங்கள்

முனைவர் க. இந்திரசித்து படத்திறப்பு ! உடுமலையில் கடந்த 27.01.2016 அன்று மறைந்த பேராசிரியர் முனைவர் க.இந்திரசித்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 05.03.2016 அன்று நண்பகல் 12 மணியளவில் உடுமலைப் பேட்டை சிங்கப்பூர் நகரில் உள்ள முனைவர் இந்திரசித்து அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. முனைவர் இந்திரசித்து அவர்கள் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். முனைவர் இந்திரசித்து அவர்களின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள் முனைவரின் நினைவுகளை கூடியிருந்த தோழர்களிடம் நெகிழ்சியோடு பகிர்ந்து கொண்டார். முனைவரின் மகள் கவிஞர் தமிழ்மகள்,முனைவரின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள்,கவிஞர் கார்கோ ஆகியோர் எழுதிய இரங்கற்பாக்கள் வாசிக்கப்பட்டன. தோழர்கள் இலெனின் பாரதி, உடுமலை அருட்செல்வன், தோழர் பொள்ளாச்சி காசு.நாகராசன் பேரா.கண்டிமுத்து, தோழன் இராசா,தோழர் கொழுமம் ஆதி, உடுமலை துரையரசன், பேரா.பொன்னரசன், முனைவர் சி.டி.கோபால், சிவசக்திராமசாமி,திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் தம்பி பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து...

பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலையில் பொதுக்கூட்டம்

05.03.2016 ஆனைமலை, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம். ”பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும்” எனும் தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்களும், கழக பொதுச்செயலாளர் ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’ அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாள் : 05.03.2016 சனிக்கிழமை ,மாலை 5.30 மணியளவில் இடம் : முக்கோணம்,ஆனைமலை (பொள்ளாச்சி). மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்கள் இடம்பெறும். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,ஆனைமலை தொடர்புக்கு : 99760 86033 – 98428 15340 – 99420 77390

கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள். கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள், ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள். கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள். கழகதோழர்கள் – 15,000 இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள். பொருட்கள் விவரம் : பேஸ்ட் 100, பிஸ்கட் 8 பெட்டி, நாப்கின் 2 பாக்ஸ், பால்பவுடர் 1 பாக்ஸ், அரிசி 150 கிலோ, பெட்சீட் 100,...

0

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கழக கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு, கிளை திறப்பு.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் ,20.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் நடைபெற்றது. கழக பெயர் பலகையை கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தர் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழக கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணன்,சமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள்...

0

தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்

தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணோஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் பெயர்பலகை யைமாநில பொருளாளர் தோழர்துரைசாமிஅவர்கள்திறந்துவைத்தர் ,அறிவியல் மன்றம் பொருப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழ்க கொடி யேற்றி வைத்தார்கள் கிளை திறப்பு விழா நடை பெற்றது இன்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட சார்பில் திருப்பூர் மாவட்ட சொயளாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணனசமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள் ராசாமணி , லோகு அன்னூர் முருகேசன் , பிரபாகரன் விவேக் ராஜசேகர் மற்றும்...