திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !
பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில்
கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு,
கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் !
ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர் வீர ராகவன், ஆசிரியர் நடராஜ்,நேதாஜி பேரவை வெள்ளை நடராஜ், சமூக நீதி பதிப்பகம் தமிழ்ச்செல்வி ஆகியோரது வாழ்த்துரைகளை தொடர்ந்து நிறைவாக கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
சட்ட எரிப்புப்போராளி ஆனைமலை ஆறுமுகம்,தபெதிக பொறுப்பாளர் அகில் குமரவேல், ஆகியோர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையேற்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு கணியாழி மாற்றி அணிந்து கொண்டனர்.
கா.க. புதூர் சாதி மறுப்பாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட சான்றித்ழகளை கழகத்தலைவர் அவர்கள் மனமக்களிடம் வழ்ங்கினார்.முடிவில் மணமகள் கிருத்திகாவின் சகோதரரும் தமிழ்நாடு மாணவர் மன்ற பொறுப்பளருமான தோழர் சண்முகவேல் நன்றி கூறினார்.
நிகழ்சியில் மக்கள் விடுதலைமுண்ணனியின் அமைப்பாளர் மாரி முத்து,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சக்தி,
அம்பேதகர் விடுதலை முண்ணனி மதி அம்பேத்கர், தென்னை தொழிலாளர் சங்கம் ஆச்சிப்பட்டி கருப்புசாமி,காட்டாறு பதிப்பாளர் விஜயராகவன், திராவிடர் கழக வழக்கறிஞர் சுப்ப்ரமணி,பெரியார் திக ஆனைமலை கதிர்,திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன்,சூலூர் பன்னீர் செல்வம், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மணமக்கள் சார்பாக திராவிடர் விடுதலைக் கழக ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் ஏட்டிற்கு 1000 ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை திவிக,பெரியார் திக,மாணவர் மன்ற தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
வாழ்வியல் உறுதி மொழியை கழக தலைவர் தலைமையில் ஏற்றுக்கொண்டபோது….