குலக்கல்வியை மீண்டும் திணிக்கும், ”புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு”
இந்திய அரசின் துணையுடன் காவி பயங்கரவாத அரசியல் நமது கல்வி, உணவு, பண்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இயக்கங்களின் ஒன்றிணைந்த முயற்சிகளை முன்னெடுக்க கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ ) மக்கள் விடுதலை(தமிழ்நாடு) ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் 15.08.16 அன்று பிற்பகல் கோவை மாவட்டம் சூலூரில் தோழர் ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்
திராவிடர் விடுதலைக் கழகம் – தோழர் கொளத்தூர் மணி,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் – தோழர் தியாகு,
சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை – தோழர் பாலன்,
தமிழ்த் தேச மக்கள் கட்சி – தோழர் தமிழ்நேயன்,
பி.யூ.சி.எல் – தோழர்கள் குறிஞ்சி, பொன்.சந்திரன், தனலட்சுமி,
சி.பி.ஐ ( எம்-எல் ) ரெட்ஸ்டார் – தோழர் குசேலர்,
தியாகி இம்மானுவேல் பேரவை – தோழர் புலிப் பாண்டியன்,
தமிழக மக்கள் முன்னணி – தோழர் அரங்க.குணசேகரன்,
தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி – தோழர் பூமொழி,
இளந்தமிழகம் – தோழர் செந்தில்,
கொற்றவை வரலாற்றுப் பேரவை – தோழர் மருதுபாண்டியன் மற்றும்
சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை தோழர்கள் விநாயகம், அருண்சோரி, காளிமுத்து, அசோகன், சிவலிங்கம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புப் போராட்டக்குழு தமிழ்நாடு ஒருங்கிணைப்பில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு கோவையில், செப் 18 அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்துவது, மாநாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சனநாயக ஆற்றல்களைக் கலந்து கொள்ளச் செய்வது என முடிவு செய்யப்பட்டது. மற்றும் பல்வேறு இயக்கங்களை இணைத்துச் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு – தோழர்கள் கு.இராமகிருஷ்ணன், மீ.த.பாண்டியன், கண.குறிஞ்சி, பொன்.சந்திரன், துரை.அசோகன், குசேலர், மருதுபாண்டியன்.
ஒருங்கிணைப்பாளராக தோழர் மீ.த.பாண்டியன் என முடிவு செய்யப்பட்டது.
தோழர்களே!
– சமஸ்கிருத, இந்தித் திணிப்பிற்கு எதிராக –
தாய்மொழி வழிக் கல்விக்காக,
– கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து, மாநிலப்
பட்டியலுக்கு மாற்றியமைக்க,
– இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை எதிர்க்க,
– கல்வி வணிகமயமாதலை முறியடிக்க
தொடர் முயற்சிகளை முன்னெடுக்க ஒரணி திரள்வோம்!
கோவையில் செப் 18, 2016 மாநாட்டிற்கு திரண்டு வாரீர்!
– பேச: 9443184051