உடுமலை – பேராசிரியர் இந்திரஜித் நினைவேந்தல் – நிழற்படங்கள்

முனைவர் க. இந்திரசித்து படத்திறப்பு !

உடுமலையில் கடந்த 27.01.2016 அன்று மறைந்த பேராசிரியர் முனைவர் க.இந்திரசித்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 05.03.2016 அன்று நண்பகல் 12 மணியளவில் உடுமலைப் பேட்டை சிங்கப்பூர் நகரில் உள்ள முனைவர் இந்திரசித்து அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

முனைவர் இந்திரசித்து அவர்கள் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

முனைவர் இந்திரசித்து அவர்களின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள் முனைவரின் நினைவுகளை கூடியிருந்த தோழர்களிடம் நெகிழ்சியோடு பகிர்ந்து கொண்டார்.

முனைவரின் மகள் கவிஞர் தமிழ்மகள்,முனைவரின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள்,கவிஞர் கார்கோ ஆகியோர் எழுதிய இரங்கற்பாக்கள் வாசிக்கப்பட்டன.

தோழர்கள் இலெனின் பாரதி, உடுமலை அருட்செல்வன்,
தோழர் பொள்ளாச்சி காசு.நாகராசன் பேரா.கண்டிமுத்து,
தோழன் இராசா,தோழர் கொழுமம் ஆதி, உடுமலை துரையரசன், பேரா.பொன்னரசன், முனைவர் சி.டி.கோபால், சிவசக்திராமசாமி,திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் தம்பி பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

IMG_2245 IMG_2247 IMG_2251 IMG_2252 IMG_2253 IMG_2254 IMG_2255 IMG_2256

You may also like...