ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! கோவை 13022017

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி,மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கர் தலைவர் தோழர் கா.சு. நாகராசந்தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3-00 மணிவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆத்தி தமிழர்- பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ., சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், சமுத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர்முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தலைவர் தீனா,  கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், மாநகரத் தலைவர் நேரு, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு உள்ளிட்ட 250 பேர் கலந்துகொண்டனர்.

16730232_10211305344725741_8071661941257159211_n 16806653_10211305342005673_1635713954608378918_n 16807348_10211305336685540_3432543444970229235_n 16831098_10211305336845544_6267171465278967409_n

You may also like...