Category: பெரியார் முழக்கம் 2024

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

சென்னை : வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் குடும்பத்தினரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 அன்று அயன்புரம் முனுசாமி தெருவில் நடைபெறுகிறது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தந்தை பெரியார் இல்ல கல்வெட்டை திறந்து வைக்கிறார். இல்லத் திறப்பு விழாவின் மகிழ்வாக கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.5000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளார். தொடர்புக்கு : 9445109323, 7550178401 பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

வினா விடை

வினா விடை

• புதிய வரி விதிப்பு முறையை நிறுத்திவிட்டோம்; வரி செலுத்துவோர், எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ, அந்த முறையை தேர்வு செய்து கொள்ளலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்படியா, வரி செலுத்தாமல் இருப்பதுதான் எங்களுக்கு நன்மை பயக்கும் திட்டம், ஓகே வா? • தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்போம் – ஓ பன்னீர்செல்வம் கட்சி, சின்னத்தை மீட்க முடியல, இப்போ கச்சத்தீவுக்கு வந்துட்டீங்க, சென்னை உயர்நீதிமன்றத்துல அடுத்த வழக்குக்கு தயாராகிட்டீங்க.. • சுங்கக் கட்டண உயர்வை திடீரென ஒன்றிய ஆட்சி நிறுத்தம் – செய்தி ‘ஓட்டு’க்காக ‘கேட்டு’ திறக்குதுன்னு ‘நாட்டுக்கு’ தெரியும். • இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்ற ‘பிஞ்சு போன செருப்பை’ இப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். – அண்ணாமலை இப்படியே பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சமாதி கட்டுவதை விரைவுபடுத்துங்க. • இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 30 ஊர்களுக்கு சீன அரசு சீன மொழியில்...

தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?

தலையங்கம் – வேலைவாய்ப்பு எங்கே?

நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலைவாய்ப்பின்மையும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பக்கோடா விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமரே அறிவுறுத்தியதுதான் மிச்சம். ஒருவாரத்திற்கு முன்பு கூட ஒன்றிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இதுகுறித்து மிக மோசமான கருத்துக்களை உதிர்த்தார். “வேலைவாய்ப்பு போன்ற அனைத்து சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளையும் அரசே தீர்க்க முடியாது. முதலீடுகள் அதிகரிக்கும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார். வேலைவாய்ப்பின்மையின் தீவிரமே ஒன்றிய பாஜக அரசுக்கு புரியவில்லை அல்லது புரிய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதைத்தான் இக்கருத்துகள் உணர்த்துகின்றன. மதத்தின் பெயரால் மக்களைத் திரட்டி வாக்குகளை அறுவடை செய்துவிடலாம், அதற்கு ராமர் கோயில் ஒன்றே போதுமானது என பாஜகவினர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போல. India Employment Report 2024...

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ஒரு இசுலாமியரைக் கூட தேர்வு செய்யவில்லை என்று அதிமுகவினரும், பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இசுலாமியர் கூட இல்லாததை அடுத்து, இந்த விவாதம் தானாக ஓய்ந்துவிட்டது. இசுலாமியர்களுக்கு திமுக இடம் ஒதுக்கியிருக்க வேண்டுமென்பது நியாயமான கேள்விதான். இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இசுலாமியர்களுக்கு ஏன் சீட் ஒதுக்கவில்லை என பாஜக ஆதரவாளர்கள் கேட்கும் கேள்விதான் நகைப்பை ஏற்படுத்துகிறது. நாமும் அவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு பார்ப்பனர் கூட வேட்பாளர்களாக இல்லை. ஆனால் பார்ப்பனக் கட்சியான பாஜகவும் ஒரு தொகுதியில்கூட பார்ப்பனர்களை நிறுத்த முன்வரவில்லையே ஏன்? எந்த பார்ப்பனராவது பாஜகவை நோக்கி இக்கேள்வியை எழுப்பினார்களா என்றால் நிச்சயம் இல்லை. வேட்பாளராக தங்களை நிறுத்தாவிட்டாலும், பாஜக...

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள்...

மணமகள் தேவை

மணமகள் தேவை

பெயர் : கார்த்திகேயன் வயது : 40 கல்வித் தகுதி : எம்.எஸ்.சி பணி : வெளிநாட்டில் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம் (ஆண்டு வருமானம் ரூ.24-30 லட்சம்) தொடர்புக்கு : 98416 53200 பெரியார் முழக்கம் 28032024 இதழ்

பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!

பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!

சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் The Music Academy-ன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத...

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கே.இ.பிரகாஷ் 22.03.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கோவை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை 26.03.2024 அன்று கோவை மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், பொங்கலூர் கார்த்தி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். சேலம் : சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை 27.03.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும்...

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென்று எஸ்.பி.ஐ.-க்கு இட்ட உத்தரவால், மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து ஆட்டம் கண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பணம் கொடுக்காத நிறுவனங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை வைத்து மிரட்டுவதும், தாராளமாக நன்கொடைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிற 41 நிறுவனங்கள் 2,471 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியிருக்கின்றன. இதில் சோதனைக்கு பிறகு மட்டுமே 1,698 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வாரி வழங்கியிருக்கின்றன. 121 கோடி ரூபாய் சோதனை நடந்த 3 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 33 நிறுவனக் குழுமங்கள் 172 முக்கியமான திட்டங்கள் மற்றும் திட்ட அனுமதிகளை அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றன. இந்த திட்டங்கள் மட்டும் ஒப்பந்தங்களின் மதிப்பு 3.7 லட்சம் கோடி...

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி… கலை வடிவத்தை விரிவுபடுத்தினார் அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றிவிட்டனர். ஆனால்...

வினா விடை

வினா விடை

• கோவையில் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தை உயர்த்தியது தான் திராவிடக் கட்சிகளின் சாதனை – அண்ணாமலை பேச்சு அண்ணா, என்னை ஜெயிக்க வைங்க, அடுத்தநாளே இந்த கோவை தொகுதியை திராவிட இயக்கத்தின் துரோகத்தை முறியடித்து பூமியின் வெப்பத்தை குறைத்துக் காட்டுகிறேனா? இல்லையா? என்பதை மட்டும் பாருங்கள். உலகம் முழுவதும் பூமி வெப்பமானதுக்கு யார் காரணம், இந்த திராவிட கட்சிகள் அல்லவா, சவால் விடுகிறேன். • எனக்கு கங்கை – கோதாவரி இணைப்பு தான் முக்கியம். கடவுள் என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், நான் இதைத்தான் கேட்பேன் – மருத்துவர் இராமதாசு நீங்கள் பிரதமராக ஆக்கத் துடிக்கும் மோடி இதை செய்யமாட்டார் என்பதால் கடவுளிடம் போயிடீங்களா? ஓகோ நீங்களும் கடவுளிடம் கூட்டணி போடும் கட்சிகளிடம் சேர்ந்திட்டிங்க போல. • பௌர்ணமிக்குப் பிறகு நல்ல நேரம் 1 மணிக்குள் முடிவதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் கட்சிகளுக்கு இடையே கடும்...

தலையங்கம் – பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!

தலையங்கம் – பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் நடந்திருக்கும் இக்கைது வடமாநிலங்களில் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்க இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விமர்சனம் இதுவரை இந்திய அளவில் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைதால் இது சர்வதேச விவாதமாகியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “இந்த வழக்கை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின்...

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை அன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள கே.கே.எஸ்.கே மஹாலில் நடைபெற்றது. செயலவை கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றினர். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் காணொளி வாயிலாக சென்னையில் இருந்து கூடியிருந்த தோழர்கள் மத்தியில் நேரலையில் உரையாற்றினார். அவர் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதை, ஆற்றிய பணிகள், நம் முன் இருக்கும் சவால்கள், பரப்புரையில் புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம், சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் பாஜக அரசை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும், திமுக கூட்டணியை ஆதரித்து தாங்கள் செய்த பரப்புரைகள் குறித்தும், அதில்...

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து ள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்....

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னையைச் சேர்ந்த தௌஃபிக் மற்றும் லியோ மார்ஷல் ஆகிய இரு இளைஞர்கள் 02.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். சென்னை கிண்டியை சேர்ந்த ஐ.டி ஊழியரான அபிநந்தன் கிருஷ்ணன், 17.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் அருண்குமார், அருண்கோமதி, அன்னூர் விஷ்ணு. இந்நிகழ்வு இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பெரியார் முழக்கம் 21032024 இதழ்

கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை : இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர் தோழர் ஃபாரூக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 16.03.2024 அன்று காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய முற்போக்கு கூட்டியக்கத் தலைவர் யூ.கலாநாதன் அவர்களின் படத்தை தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்வை ததிசுக தலைவர் நேருதாசு தலைமை தாங்கினார். இதில் தோழமை இயக்கத்தினர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர். ஜின்னா மாச்சு, வழக்கறிஞர் PUCL பாலமுருகன் ஆகியோர் ஃபாரூக் வழக்கு நடைபெறுவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மறைந்த தோழர் ஃபாரூக் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழக சார்பில் மாநகரத் தலைவர் நிர்மல் குமார், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் புரட்சித்தமிழன், சதீஷ், இராஜாமணி, நவீன், அறிவுக்கனல் கலந்து கொண்டனர்‌ பெரியார் முழக்கம் 21032024 இதழ்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மார்ச் 14ஆம் தேதி மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மந்தைவெளி, சின்ன சேலம் பேருந்து நிலையம், நைனார்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கா.மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர் ராமலிங்கம், சின்ன சேலம் விசிக ஒன்றியச் பொருளாளர் மைக்கேல், அஜித், வழக்கறிஞர் ஆனந்த், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க. ராமர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சாக்ரடீசு, விசிக தலித் சந்திரன் தபெதிக மாவட்டச் செயலாளர் செ.பிரபு ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். இரண்டாவது நாளாக 16.3.2024 அன்று மு.நாகராஜ்...

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் குருவரெட்டியூர் தோழர் நாத்திகசோதி அவர்களின் இணையர் தோழர் மகேஸ்வரி அவர்கள் 13.03.2024 காலை மறைவுற்றார். அவரது கண்கள் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வர கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து. மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு குருவரெட்டியூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக, மாநில மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மறைந்த தோழர் மகேஸ்வரி அவர்களின் பட திறப்பும் நினைவேந்தல்...

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

வினா விடை

வினா விடை

• சிவன், பிரம்மா, விஷ்ணு மூதேவர்களின் ஆசியோடு மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க போகிறேன். – மோடி பதவி ஏற்புக்கும் குடியரசுத் தலைவரை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டீர்களா? • தேர்தல் பத்திரம்; பாஜகவை கண்டிக்காமல் எடப்பாடி மௌனம் – செய்தி மோடியை ஆதரித்தே பழக்கப்பட்ட நாங்கள் மௌனம் சாதிப்பது கடுமையான எதிர்ப்பு தான். நாங்கள் பனங்காட்டு நரி, பயப்படாமல் மௌனம் இருப்போம். • ‘நிரபராதி’ என்று அறிவிக்கப்படாததால் பொன்முடிக்கு அமைச்சராக ‘பதவி பிரமாணம்’ செய்து வைக்க மாட்டேன் – ஆளுநர் ரவி சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவரை பதவியில் இருந்து நீக்க மாட்டேன். அம்புட்டு நேர்மைக்காரன் நான். • தேர்தல் பத்திர ஊழல் வழக்கை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை சும்மா இருங்க… மோடி தனி ஆணையம் அமைத்து, அதற்கு நிர்மலாவை தலைவராக்கி விடுவார். • ஆயிரம்...

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

திருச்சி : பெரியார் பெருந்தொண்டரும், ஈரோடு மாவட்டக் கழக ஆலோசகருமான அய்யா இனியன் பத்மநாபன் (97) வயது முதிர்வினால் 15.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அய்யாவின் உடலுக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், கிருட்டிணன், பிரபு, திருப்பூர் சங்கீதா, தனபால், முத்து ஆகியோர் கழகக் கொடியைப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்கள். அவரது உடலை கழகப் பெண் தோழர்களே சுமந்து சென்றனர். பின்னர் எந்தவித மூட சடங்குகளுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்டது. இறுதி நிகழ்வில் மணப்பாறை பாலசுப்பிரமணியம், வையம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர் – துரை காசிநாதன், திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழக நகரச் செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ், விசிக நகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு அய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

சேலத்தில் மோடிக்கு கருப்புக் கொடி

சேலத்தில் மோடிக்கு கருப்புக் கொடி

இன்று 19.03.2024 சேலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

நான் கேரண்டி

நான் கேரண்டி

என் மீது பாசத்தைப் பொழியும் தமிழ் மக்களே! உங்களுக்கு நான் கேரண்டி தருகிறேன். ஒன்றல்ல; இரண்டல்ல; வண்டி வண்டியாக…. • ‘நீட்’டை திரும்பப் பெற மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ளம் வந்தால் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட தர மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • மெட்ரோ ரயில் திட்டமா? எங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் தந்தார்களா? கவலைப்படாதீர்கள். அதற்கு நிதி ஒதுக்காமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வராது. இப்போது அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது ஒரு நாடகம். கவலைப்படாதீங்க, அடுத்தக்கல்லு வராமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • கிராமப்புற வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காமல் முடக்கிப் போடுவதற்கு நான் கேரண்டி • அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறைகளை எங்களை எதிர்ப்பவர்களுக்கு...

காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!

காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாயை ‘திராவிட மாடல்’ திமுக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் இத்தகைய திட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. நேரடியாக மக்களிடத்தில் பணத்தை வழங்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் தூண்டி விடப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்றும், சாமானிய மக்களின் சமூகப் பொருளாதார ஏற்றத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது என்றும் இருக்கிற பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு, இத்திட்டமே பிச்சை போடுவது என மிக அநாகரீகமாகப் பேசி, மக்களிடத்தில் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறார். ஒரு திட்டம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் பின்பற்றுவார்கள். தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தை டெல்லி, கர்நாடகா போன்ற அரசுகளும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன. சில மாநிலங்களில் பாஜகவே இதை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது. அதையும் ‘பிச்சை’...

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை,...

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை : அன்னை மணியம்மையார் 105வது பிறந்தநாள் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்வு 10.03.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பிரீத்தி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, ரம்யா ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி, சமூக செயற்பாட்டாளர்கள் அக்னி – மரக்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மதிய உணவிற்கு பிறகு தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக யாழினி நன்றி கூறினார். திருப்பூர் : உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் 08.03.2024 அன்று நடந்த மகளிர் தின விழாவில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 15032024...

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

சேலம் : கொளத்தூர் நிர்மலா பள்ளி ஆசிரியரும் கழகத் தோழருமான செல்வேந்திரனின் தந்தை பெ.செல்லமுத்து கடந்த 04.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெ. செல்லமுத்துவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 10.03.2024 அன்று கொளத்தூர், உக்கம் பருத்திக்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக மறைந்த தோழர் பெ. செல்லமுத்துவின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் இரா. விஜயகுமார் தலைமை தாங்கினார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், உக்கம்பருத்திக்காடு கிளைத் தலைவர் சுப்பிரமணியம், TNEB ஈரோடு பெ.அன்புச்செழியன், மருத்துவர் வ.ப.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணம்மாள், நிர்மலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ம.விஜய் அமுல்ராஜ் ஆகியோர் தோழர் செல்லமுத்து அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்....

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு 2024 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 05.03.2024 அன்று குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு குன்னத்தூர் பகுதிப் பொறுப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார், குன்னத்தூர் சின்னச்சாமி, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் முகில் ராசு, கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். இதில் மாநகர அமைப்பாளர் மாதவன், சரஸ்வதி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!”...

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:- அண்ணாவின் பொதுவுடைமை சிந்தனை அண்ணாவின் நினைவுநாளில் அவரைப் பற்றி பேசுவதும், அவரின் சிந்தனைப் போக்கும் செயல்பாடுகளும் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தில்தான் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று கருதுகிறேன். 1930-களில் எம்.ஏ என்பது உயர்ந்த படிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உயர்ந்த படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கோ, மற்ற வேலைக்கோ செல்லாமல் சமூகப் பணிக்கு வந்தார் என்பதே அண்ணாவை பற்றிய ஒரு பெரிய மதிப்பை நம் மனதில் ஏற்படுத்தும். அறிஞர் அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து முதுநிலை கல்வியை முடித்தவர். அரசியலில் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவர் பெரியாரிடம் வந்த பிறகு ஏற்பட்டது என்று கூட நான்...

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சிபுரம் : பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! ஜனநாயக இந்தியாவைக் கட்டமைப்போம்! என்ற கொள்கை முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றத்தின் பேரணி – பொதுக்கூட்டம் – கலை நிகழ்ச்சிகள் 09.03.2024 அன்று காஞ்சி பெரியார் நினைவுத் தூண் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, பெங்களூர் சித்தார்த்தன், அருண்குமார், எட்வின் பிரபாகரன், சூர்யா, மயிலை குமார், அன்னூர் விஷ்ணு, உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு இரா.வீரமணி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். முன்னதாக விடுதலைக் குரல் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இணையேற்பு விழாவின் மகிழ்வாக மணமக்கள் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார். 15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி. இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள்...

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

இந்தியாவின் மதச்சார்பின்மையை சுக்கு நூறாக உடைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியுரிமை பெறலாம். ஆனால் இசுலாமியர்கள் வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அதேபோல இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாது. ஆக, பாஜகவின் அணுவில் ஊறிப்போன மத வெறுப்பும், தமிழின விரோதப் போக்குமே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர் என்றெல்லாம் மோடி பேசுவதெல்லாம் பாஜக மீதான வெறுப்புணர்வை கரைக்கும் முயற்சியே தவிர, உண்மையான பற்றில்லை என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 2019ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன....

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

இந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது. மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது....

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக் கூட்டம் ஈரோட்டில் மார்ச் 21 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடைபெற உள்ளது. நாள் : 21.03.24 வியாழன் நேரம் : காலை 9.30 மணி முதல் இடம் : கே.கே.எஸ்.கே மகால், பவானி சாலை, ஈரோடு. பொருள் : • 2024 பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு. • கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள். • நடைபெற்று வரும் பரப்புரை பயண அனுபவங்கள். கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் (மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள்) இந்த செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். 11.03.2024 பெரியார் முழக்கம் 15032024 இதழ்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பதற்காக அந்த தீர்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்ப்பின் நகல் கடந்த மார்ச் 7ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென்று அடுத்த தினமே அந்த தீர்ப்பு இணையதளத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி பல்வேறு திருத்தங்களுடன் அந்த தீர்ப்பு மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றிய கருத்துக்கள் அதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சனாதனம் பற்றி குப்புசாமி சாஸ்திரியின் ஆய்வு மையத்தில் உள்ள பேராசிரியரின் கருத்தை நீதிமன்றம் கேட்டதாகவும், அவர்கள் தந்த விளக்கத்தின் அடிப்படையில் “சனாதன தர்மம் பிராமண – வைசிய – சத்திரிய – சூத்திர வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சனாதன தர்மம் வாழ்க்கையின் விழுமியங்களை பேசுகிறது. அது...

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது. தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 07032024 இதழ்

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றுவரும் உண்ணா விரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறி ஞர்களை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா‌.உமாபதி ஆகியோர் 02.03.2024 அன்று சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இராஜேஷ், அருண் கோமதி, எட்வின் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1-இல் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 07032024 இதழ்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! தெருமுனைக் கூட்டங்கள் 20.02.24 மற்றும் 21.02.24 ஆகிய இரு நாட்கள் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம் முன்பு, பெதப்பம்பட்டி, துங்காவி, காரத் தொழுவு, கணியூர், வடதாரை பூளவாடி பிரிவு, ஐந்து முக்கு, பேரறிஞர் அண்ணா சிலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல்,கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், திவிக தாராபுரம் நகரப் பொறுப்பாளர் செல்வராசு, திருப்பூர் அய்யப்பன், சரசுவதி, விசிக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தங்கவேல், உடுமலை முற்போக்கு கூட்டமைப்பு...

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து...

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து, ஆரிய கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல் ஆளுநர் ரவி பேசியுள்ளார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். சாதியை மறந்து பூமியில் ஒத்த இனமாக வாழ வலியுறுத்தினார். ஆனால் மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசு தான், அய்யாவை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது. 800 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். அய்யாவின் வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்க கூடாது. ஆளுநர் சொல்வது போல் அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வரவில்லை. மக்களை அதிலிருந்து காக்க வந்தார். அவர்களிடம் இருந்த மடமையை, அறியாமையை போக்க வந்தார். தங்களுடைய சுயலாபத்திற்காக யாரும் வரலாற்றை திரித்து பேசக்கூடாது. ஜாதியை வகுத்தவனை நீசன் என கூறும் அய்யா வைகுண்டரை சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் கூறுவதை ஒருபோதும் ஏற்க...

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

வள்ளலார், திருவள்ளுவர் என சனாதனத்துக்கு எதிராக, சமத்துவத்தைப் பேசிய தமிழின் பெருமைக்குரிய தலைவர்களை எல்லாம் ‘சனாதனவாதிகள்’ என திரிபுவாதம் செய்கிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துகொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது அய்யா வைகுண்ட சுவாமிகளையும் சேர்த்திருக்கிற ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டி வளப்படுத்தியவர் அய்யா வைகுண்டர்” என்று கூறியிருக்கிறார். அய்யா வைகுண்ட சுவாமிகளை இழிவுபடுத்துகிற ஆர்.என்.ரவியின் இப்பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமிகளைப் பற்றி 2018ஆம் ஆண்டு மே மாதம் நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறோம். ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில்...

வினா விடை

வினா விடை

• எனக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு மிகப் பழமையானது. – மோடி ஆமாம், கீழடி அகழ்வாராய்ச்சியிலேயே அதற்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லுவிங்களோ, உங்கள் பெயரே பத்தாண்டுகளாகத்தான் எங்களுக்கு தெரியும். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு. • சென்னைக்கு வரும் போது தமிழர்களால் எனக்கு சக்தி கிடைக்கிறது – மோடி அதனால் தான் கல்பாக்கத்தில் ஈனுலை அழிவு சக்தியை எங்கள் தலையில் கட்டியிருக்கிங்களா? • பாஜக தேர்தல் சுவரொட்டியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் – செய்தி விட்டா… முனுசாமி, சி.வி. சண்முகம் படத்தை கூட போட்டுப்பாங்க. • புதுக்கோட்டை கோயில் கர்ப்பகிரகத்தில் அரிவாளுடன் நுழைந்த நபரை காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்து வெளியேற்றியது. – செய்தி அய்யயோ ஆகமம் அனுமதிக்குமா? ஏன், வேத மந்திரங்களை வைத்து வெளியேற்ற முடியாதா? • ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக மலரும் – ஆளுநர் தமிழிசை ஆனால், ஆன்மீக ஆளுநர்களை கொண்ட மாநிலங்கள் நன்றாக வதைபடும். •...

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத்...

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், வட மாநிலங்களில் வேலையின்மை, வறுமை போன்ற வாழ்வாதார சிக்கல்கள் மேலோங்கி இருக்கின்றன. பாஜகவின் வழக்கமான இந்துத்துவ கோஷம் இந்தத் தேர்தலில் எடுபடப் போவதில்லை, இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்தியா கூட்டணி தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமைகளையே அதிகம் முன் வைக்கின்றனர். பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரிடம் இதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. குறிப்பாக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 10 நாட்களாக அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் “ஜன் விஸ்வாஸ்’ பரப்புரையின் நிறைவுக் கூட்டத்தை நடத்தினார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், 15 நேரம் விட்டு விட்டு பெய்த...

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும்...

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது. சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும். சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு...

பெரியார் பல்கலை. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

பெரியார் பல்கலை. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை.யில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புப் பதிவாளராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (60) பல்கலை நிதியை களவாடியது உள்பட அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பரிந்துரை செய்தது. உயர்கல்வித்துறை பரிந்துரையை எதிர்த்து தங்கவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ,”உயர்கல்வித்துறை பரிந்துரை மீது பெரியார் பல்கலை. எடுத்த நடவடிக்கை என்ன?. உயர்கல்வித்துறை பரிந்துரை செய்தும் பல்கலை. பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்கல்வி செயலாளரின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் ஜெகநாதன் அரசிடம் விளக்கம் கேட்டது...

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. விடுமுறை இல்லை,...

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...