கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்
கோவை : இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர் தோழர் ஃபாரூக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 16.03.2024 அன்று காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய முற்போக்கு கூட்டியக்கத் தலைவர் யூ.கலாநாதன் அவர்களின் படத்தை தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்வை ததிசுக தலைவர் நேருதாசு தலைமை தாங்கினார். இதில் தோழமை இயக்கத்தினர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.
ஜின்னா மாச்சு, வழக்கறிஞர் PUCL பாலமுருகன் ஆகியோர் ஃபாரூக் வழக்கு நடைபெறுவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் மறைந்த தோழர் ஃபாரூக் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழக சார்பில் மாநகரத் தலைவர் நிர்மல் குமார், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் புரட்சித்தமிழன், சதீஷ், இராஜாமணி, நவீன், அறிவுக்கனல் கலந்து கொண்டனர்
பெரியார் முழக்கம் 21032024 இதழ்