தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து
வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது.
தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன்.
இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 07032024 இதழ்