Category: பெரியார் முழக்கம் 2022

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவப் படு கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பாராட்டு விழா, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.கூட்டணி) முதல் நகர்மன்ற பெண் தலைவர், மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றன. இம்முப்பெரும் விழா 25.04.2022 அன்று மாலை 5 மணியளவில், ராசிபுரம் கன்னட சைனியர் மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சே குவேரா தலைமை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக நகர அமைப் பாளர் சுமதி மதிவதனி வரவேற்பு கூறினார். நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, இராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய...

பல்லக்குத் தூக்குவதை எதிர்த்து குத்தூசி குருசாமி பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றார்

பல்லக்குத் தூக்குவதை எதிர்த்து குத்தூசி குருசாமி பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றார்

பட்டினப் பிரவேசம் என்ற பெயரில் சைவ மடாதிபதிகளை பல்லக்கில் வைத்து தூக்கும் மனித உரிமைக்கு எதிரான செயல் குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த குத்தூசி குருசாமி பேசி அந்தப் பேச்சுக்காக மூன்று வாரம் சிறைத் தண்டனைப் பெற்ற வரலாற்றை இளைஞர் களுக்கு நினைவுபடுத்துகிறோம். 1960 ஜூலை 25இல் தஞ்சை மாவட்டம் திருவையாறு என்ற ஊரில் குத்தூசி குருசாமி இவ்வாறு பேசினார். “மனிதன் மனிதனைச் சுமப்பது அநீதி. மோட்டார் வாகனம் வந்திருக் கின்ற இந்த நாளில் வாகனத்தையும், ‘சாமியையும்’ ஒரு லாரியில் வைத்து ஓட்டிச் செல்லலாம், பக்தர்களுக்குச் சுண்டைக்காய் அளவாவது புத்தியிருந் தால். பாட்டாளித் தோழர்கள், அர்ச்ச கரையும் வாகனத்தையும் என்றாவது ஒரு நாள் காவிரியாற்றுப் பாலத்தின் மேலே போகும்போது, தோள்பட்டை வலி பொறுக்கவில்லையே என்று காரணம் காட்டி, தவறுதலாக நடந்ததுபோல், காவிரியாற்றுக்குள் போட்டாலொழிய இதற்கொரு முடிவு காண முடியாது.” இந்தப் பேச்சுக்கும் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தி...

சிவத்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா? எட்வின் பிரபாகரன்

சிவத்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (7) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 11: மனித உடல் என்பது ஓர் உடல் அல்ல, அது மூன்று உடல்களால் ஆனது. அவை (1) ஸ்தூல சரீரம், (2) சூக்ஷ்ம சரீரம், (3) காரண சரீரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐம்பூதங் களின் சேர்க்கையால் உருவாக்கப் பட்டது ஸ்தூல சரீரம். ஸ்தூல சரீரத்தை தாண்டி, மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் உறைவிடம் சூக்ஷ்ம சரீரமாகும். இந்த சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரத்தை சுற்றி ஒரு ஒளிவட்டத்தின் வடிவில் சக்தியாக பரிணமிக்கிறது. மனிதன் இறந்த பின், அவனுடைய ஆன்மா, சூக்ஷ்ம சரீரத்தின் மேலேறி சிறிது காலம் தன் உடலைச் சுற்றி அலைவதாகவும், அந்த சூக்ஷ்ம சரீரத்தை கரைத்து, காரண சரீரமாக மாற்றுவதற்கு தான்...

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதியவருக்கு உச்சநீதிமன்ற பதவியா?

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதியவருக்கு உச்சநீதிமன்ற பதவியா?

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்திருக்கிறது. கொலிஜியம், எஸ்.வி.இரமணா தலைமையில் நான்கு பேர் அடங்கியக் குழுவைக் கொண்டதாகும். பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பேர்களில் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜம்ஷெத் பி. பார்த்திவாலா என்பவர் ஆவார். இவரது பின்னணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2015 டிசம்பர் 1 இல் ஹர்திக் பட்டேல் பிரிவுக்கு தனி ஒதுக்கீடு கேட்ட வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் வந்த போது, அவர் தெரிவித்த கருத்து கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறினார். “இந்த நாட்டை அழித்துவரும் இரண்டு கேடுகள் எதுவென்று என்னைக் கேட்டால், ஒன்று ‘இட ஒதுக்கீடு’, மற்றொன்று ‘ஊழல்’ என்று நான் கூறுவேன். நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த ஒரு குடிமகனும் இட ஒதுக்கீடு கேட்பது வெட்கக் கேடானது” என்று அவர் கூறியதோடு, “அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மட்டுமே இட...

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள். மந்திரம் இல்லை தந்திரமே என்ற...

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

  சங்கராபுரம் மாநாடு மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவினர் லெனின் சுப்பையா பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பங்கேற்றுப் பேசினார். ஏப்ரல் 3 ஈரோட்டில் நடைபெற்ற கழகத்தின் செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மாநில உரிமைகளைப் பறிக்காதே, கல்வி உரிமைகளைத் தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்று மண்டல மாநாடு நடத்துவது, அதனை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மே 3 ஆம் நாள் சங்கராபுரத்தில் மாநாட்டினை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நோக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 3000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது. 27 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 500 சுவரொட்டிகள்...

நன்கொடை

நன்கொடை

திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா – திருப்பூர் மாநகர அமைப்பாளர் தனபால் இணையரின் மகள் பெரியார் பிஞ்சு யாழினி தனது சேமிப்புத் தொகையான ரூ.550-அய் தனது பிறந்தநாளையொட்டி 10.4.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக வழங்கினார். பெரியார் முழக்கம் 05052022 இதழ்

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுடன் வாழும் சித்ராவிற்கும்- ஹரிகிருஷ்ணனுக்கும் 25.04.22 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இணையர் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 05052022 இதழ்

மோடி ஆட்சியில் நடக்கும் வங்கி சூறையாடல் கொழுக்கிறார்கள் – பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் – ஏழை எளிய ‘இந்துக்கள்’

மோடி ஆட்சியில் நடக்கும் வங்கி சூறையாடல் கொழுக்கிறார்கள் – பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் – ஏழை எளிய ‘இந்துக்கள்’

அரசு வங்கிகளில் பல்லாயிரம் கடன் வாங்கி பட்டை நாமம் சாத்தி விட்டு வெளி நாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். பார்ப்பன-பனியா ‘இந்துக்கள்’.உழைக்கும் இந்துக்கள் வங்கிகளில் பெறும் சில ஆயிரம் ரூபாய்க்கு அவமானப் படுகிறார்கள். 17 வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில், 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா. பஞ்சாப் நேசனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு தப்பியோடிவர்கள் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது மாமனார் மெகுல் சோக்சியும். அதனைத்தொடர்ந்து நாட்டையே உலுக்கிய 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் மோசடியில் குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி. ஷிப்யார்டு என்னும் கப்பல் கட்டுமான நிறுவனம் சிக்கியுள்ளது. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடி. இந் நிறுவனத்திற்கு இடம் வழங்கியது குஜராத் மாநில பாரதிய ஜனதா...

“நடராஜ மகாத்மியம்” நூல் எழுதியவர் மீது பாஜக புகார் அளிக்குமா? தமிழ்நாடு பாஜவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

“நடராஜ மகாத்மியம்” நூல் எழுதியவர் மீது பாஜக புகார் அளிக்குமா? தமிழ்நாடு பாஜவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை U2Brutus வலைக்காட்சியில் சிதம்பரம் நடராஜன் சிலை குறித்து பேசியதற்காக இந்துமதக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியினர் அறிக்கை, புகார் என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘நடராஜ மகாத்மியம்’ என்ற நூலில் எழுதப்பட்டு இருக்கிற செய்திகளை மேற்கோள்காட்டி “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூலின்  முதல் பதிப்பில் 190, 191, 192, 193 ஆகிய பக்கங்களில் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி உள்ளதை எடுத்துப் பேசியிருக்கிறார். அதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும்,  எச். ராஜா என்பவரும் உடனடியாக அந்த வலைக்காட்சி யில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற அதி புத்திசாலித்தனமான கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். முறையான அரசியல் செய்வதற்கு சரியான காரணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால், கடலில் தத்தளிக்கும் ஒருவர் துரும்பு கிடைத்தாலும் பிடித்துக்கொண்டு தப்பித்து விடலாம் என்று நம்புவதைப் போல, ...

‘ஆன்மீக உளவியல்’ எனும் கற்பனை எட்வின் பிரபாகரன்

‘ஆன்மீக உளவியல்’ எனும் கற்பனை எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (6) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 10: உப்டோன் பியல் சின்கிலைர் என்ற அமெரிக்க எழுத்தாளர், தன்னுடைய துணைவி மேரி கிரெய்க்குக்கு, Telepathy (நுண்ணுணர்வு) இருப்பதை அறிந்து கொண்டு, நுண்ணுணர்வில் ஆய்வு செய்தார். தன்னுடைய துணைவிக்கு நுண்ணுணர்வு திறனால் கிடைத்த அனுபவங்களை, “Mental Radio” என்ற பெயரில் நூலாக வெளி யிட்டார். தன் வீட்டுக்கு வரும் பல முக்கிய பிரமுகர் களுக்கு, தன் துணைவியின் நுண்ணுணர்வுத் திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். இதனால், அறிவியலை மிஞ்சிய ஆன்மீக உளவியல் உண்டு என்பது உறுதியாகிறது. விடை: எவ்வளவோ சோதனைகளை நடத்திய போதும், நுண்ணுணர்வை நிரூபிக்க ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்ற உண்மையை டால்க்விஸ்ட் (1994), ஹோக்கார்ட் (1995), ராபர்ட் கோகன் (1998), டெரென்ஸ் ஹைன்ஸ்...

தலையங்கம் மருத்துவக் கல்லூரியில் ‘சமஸ்கிருத துதி’ ஏன்?

தலையங்கம் மருத்துவக் கல்லூரியில் ‘சமஸ்கிருத துதி’ ஏன்?

மருத்துவக் கல்லூரிக்கு மனு போடுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க  வேண்டும் என்ற நடைமுறை, சென்னை மாகாணத்தில் நிலவியது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் அது ஒழிக்கப்பட்டது. மீண்டும் சமஸ்கிருதப் பண்பாட்டை மருத்துவத் துறையில் திணிக்க ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியிருக்கிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், பத்திரப் பதிவு அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற விழாவில், இது வரை பின்பற்றப்பட்டு வந்த ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழியை மாற்றி ‘மகரிஷி சரக சபதம்’ என்ற சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதி மொழியை ஆங்கில மொழி வழியாக உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மருத்துவக் கல்லூரியில் புதிதாக மாணவர் சேர வரும்போது அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் (White Coat Ceremony) ‘ஹிப்போகிரட்டிக்’ என்ற உறுதிமொழிதான் உலகம் முழுதும் ஏற்கப்பட்டு வருகிறது. இந்த உறுதிமொழியை ஆங்கில மருத்துவத் தின் தந்தையாகக் கொண்டாடப்படும் ஹிப்போகிரட்டீஸ் உருவாக்கினார்....

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம்-கோவை மாவட்டங்களில் “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” பரப்புரை – மக்கள் பேராதரவுடன் நடந்தது. விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் 23-04-22 அன்று காலை11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் கண்டமங்கலத்தில் தொடங்கியது.  பாக்கம் கூட்ரோடு, வளவனூர், கோலியனூர், விழுப்புரம் இரயில் நிலையம் நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் இரவு 9 அளவில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ம.க.இ.க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி பிரகாஷ், ராஜ் ஆகியோர் மக்களைக் கவரும் வகையில் பாடல்களை பாடி சிறப்பித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புரை செயலாளர் விஜி பகுத்தறிவு, பா. விஜய குமார், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தோழர்கள் அழகர், தமிழ், லிங்க...

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

வங்கதேச டாக்காவில் மனிதநேயர் ஃபாரூக் நினைவு குருதிக்கொடை முகாம்

வங்கதேச டாக்காவில் மனிதநேயர் ஃபாரூக் நினைவு குருதிக்கொடை முகாம்

22.04.2022 அன்று காலை 9:30 மணி முதல் 1:00 மணி வரை டாக்கா தமிழ்ச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் இணைந்து ஃபாரூக் நினைவாக குருதிக் கொடை முகாமை நடத்தின. பெரியார் முழக்கம் 28042022 இதழ்

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

24-04-2022 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் பெங்களூர் ஹோட்டல் கேபிடல் அரங்கில் தாமரை வேணி – ஜார்ஜ் இணையரின் மகன் பீமாராவ் க்கும் மங்கம்மா-புஷ்பராஜ் இணை யரின் மகள் சந்தியாராணிக்கும் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி   தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது. மணவிழா மேடையில் பெரியார், அம்பேத்கர் படங்கள் சுயமரியாதைத் திருமணம் என்ற எழுத்துகளோடு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் தொடக்கத்தில் நிமிர்வு கலையகத் தோழர்களின் பறையிசை எழுச்சி யோடு முழங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சமதா  தேஷ்மானே, ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜிகானி சங்கர், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான  டாக்டர் பத்மாக்ஷி லோகேஷ், முனியஜினப்பா, லோகேஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். முனைவர் சமதா தேஷ்மானே பேசும்போது, தான் தாலியில்லாத சடங்கில்லாத திருமணத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திக் கொண்டு நலமாக வளமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறி, வேத, புராண, சாத்திர...

‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி

‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி

இராம நவமி விழாக்களில் கலவரம் விளைவித்தார்கள் என்று சிறுபான்மை மக்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினர் புல்டோசரை வைத்து தகர்த்து வருகின்றனர். புது டெல்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த புல்டோசர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. உச்ச நீதிமன்றம் அதிர்ச்சியடைந்து தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து ‘உடனடியாக இந்த புல்டோசர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தடை வந்தப் பிறகும் கூட புல்டோசர் தாக்குதல்கள் தொடர்ந்தன, அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தற்போது “பாரதிய புல்டோசர் கட்சி”யாக உரு மாறியிருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கிறார்கள், அதே சமயம் பெரும்பான்மை இந்துக்களுக்குத் தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், பெரும்பான்மையான இந்துக்களின் வாழ்வாதாரத்தை புல்டோசரை வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி மேலும் 143 பொருட்களுக்கு உயர்த்தப்படுவதாக...

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

கியூட்-நீட்-கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? மு. இராமநாதன்

கியூட்-நீட்-கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? மு. இராமநாதன்

ஒரு புதிய நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது. கியூட் அதன் பெயர் (CUET – Central University Eligibility Test). மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தகுதித் தேர்வு என்பது பொருள். இனிமேல் மத்திய பல்கலைக் கழக வளாகங்களுக்குள் மாணவர்கள் கால் பதிக்க வேண்டுமானால், இந்தத் தேர்வில் அவர்கள் கை நிறைய மதிப் பெண்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்துவருகிறது. இது தவிர கேட் என்றொரு நுழைவுத் தேர்வும் நடந்துவருகிறது; இது பொறி யியல் முதுநிலைப் படிப்பிற்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. ஏன் இப்படியான நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன? ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை யானது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குப் போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது (பத்தி 4. 42, பக்கம் 19). அதாவது அடுத்தகட்டமாக இந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும்...

வினா – விடை

வினா – விடை

காஞ்சி குரு விஜயேந்திரனை விமர்சித்தவரை கைது செய்ய வேண்டும்.                 – தமிழ்நாடு பிராமண சமாஜம் கைது செய்வதோடு நிறுத்தக் கூடாது; விஜயேந்திரன் கொலை வழக்கில் எந்த சிறையில் இருந்தாரோ அதே அறையில் போட்டு பூட்ட வேண்டும்; அப்பத் தான் புத்தி வரும். ஆன்மீகப் பயணம் முடிந்தது; அடுத்து அரசியல் பயணம் தொடங்கு கிறேன். – சசிகலா தொடக்க விழா – கொடநாடு ‘எஸ்டேட்டில்’; இரண்டாவது விழா – கருநாடகா நீதிமன்றத்தில்; தவறாது வருக! சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலிருந்து முகலாயர் வரலாறு – ஜனநாயகம் பற்றிய பாடங்கள் நீக்கம்.. – செய்தி அதுக்கு பதிலாக புல்டோசர் வைத்து இடிப்பது; ஜீப் ஏற்றி சாகடிப்பது போன்ற ‘அகிம்சை’ தத்துவங்களை சேர்க்கலாம். நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காட வேண்டும்; இல்லையேல் திருமண வீட்டில் மந்திரங்கள் ஓதுவதுபோல யாருக்கும் புரியாது. – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘ஆண்டி இந்தியன்’ எச்.ராஜா, எங்கே போயிட்டீங்க… இதுக்கு ‘ஹாட்டா’ ஒரு பதிலடி...

பிரெஞ்சுப் புரட்சியில் மரணிக்கப் போவோரின் பட்டியலை கசோட் கணித்தாரா? எட்வின் பிரபாகரன்

பிரெஞ்சுப் புரட்சியில் மரணிக்கப் போவோரின் பட்டியலை கசோட் கணித்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (5) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 8: பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரிகோ என்ற விவசாயி, பல மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய் களை குணப்படுத் தினார். துருப்பிடித்த கத்தியையும், கத்தரிக்கோலையும் வைத்தே அறுவை சிகிச்சை செய்தார். முறை யாக மருத்துவம் படிக்காத இவரால் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது? என்ற கேள்விக்கு மருத்துவ உலகில் பதில் இல்லை. விடை:முதலில் அரிகோ பல நோய் களை குணப்படுத் தியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. உலகப் புகழ் பெற்ற நாத்திக அறிஞர் ஜேம்ஸ்ரண்டி, 1982இல் இதை பற்றி “Film – Flam Psychics Especially Unicorns & other delusions” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மாயா ஜாலம் (தந்திரம்) செய்பவர்களின், மக்களை...

தலையங்கம் மக்கள் உரிமைகளை முடக்கும் ‘மனுவாத’ ஆளுநர்கள்

தலையங்கம் மக்கள் உரிமைகளை முடக்கும் ‘மனுவாத’ ஆளுநர்கள்

‘படைப்புக் கடவுள்’ பிர்மா மனுசாஸ்திரத்தை உருவாக்கி, பிராமண-சத்ரிய – வைசிய – சூத்திரர்களுக்கு தகுதி, கடமைகளை வகுத்திருப்பதால் அதன்படி வாழ வேண்டியதே தர்மம் என்று பார்ப்பனியம் சமூகத்தில் வர்ணாஸ்ரமத்தைத் திணித்தது. இதில் மக்கள் முடிவு செய்ய எந்த உரிமையும் இல்லை. அதேபோல் ஒன்றிய சாம்ராஜ்ய ‘பிரம்மாக்களால்’ – ‘மனுசாஸ்திரம்’ முறையாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர்கள் என்ற ‘தேவ தூதர்கள்’ – கல்வி, மொழி, பண்பாடு உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்காக அவர்களே தீர்மானிப்பார்கள். இதில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சிகளோ மக்களோ தலையிட முடியாது. தலையிட்டால் எருமை வாகனத்தின் மீது ‘சித்திரபுத்திரர்கள்’ விரைந்து வந்து “நரக”த்துக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறார்கள். ‘மனுவாதிகள்’ இப்போதும் வேறு வடிவத்தில் ‘ராமராஜ்யம்’ நடத்துகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு ‘திராவிட மாடல்’ பணியாது என்பது மட்டுமல்ல; திருப்பித் தாக்கும் என்று தமிழ்நாடு அரசு போர்ச் சங்கைக் கையில் எடுத்து விட்டது. தமிழ்நாட்டில்...

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

பரப்புரைப் பயணத்துக்கான 15 வெளியீடுகளில் ஒன்று “மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?” பெரியாரியவாதியும் ஊடக வியலாளருமான ர. பிரகாஷ் மிகச் சிறப்பாக ஏராளமான தகவல்கள் தரவுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மக்களை எப்படி ஏமாற்று கிறார்கள்? ஜி.எஸ்.டி. கொள்கையால் மாநிலங்கள் வருவாய் எப்படி சுரண்டப் படுகின்றன? ஏர் இந்தியா, எல்.அய்.சி. பங்கு விற்பனைக்கு ஒன்றிய ஆட்சி கூறும் மக்களை ஏமாற்றும் போலி வாதங்கள் என்ன? அதில் உண்மை இருக்கிறதா? பொதுத் துறை நிறுவனங்கள் ஏன் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது? பயனடைவது யார்? எப்படி விதிமீறல்கள் நடக்கின்றன? கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணம் கொட்டி அழப்படுவதோடு வங்கிகள் கடன்களை வாரி வாரிக் கொடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள். கார்ப்பரேட் சேவைகளுக்காக பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் பரிசுகள்; பரிவர்த்தனைகள் என்ன? ஊழல் எதிர்ப்புக் கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் பா.ஜ.க.வின் போலி முகமூடியைக் கிழித்துக் காட்டும் ‘தேர்தல் பத்திரங்களின்’ கதை!...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது. சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம்  ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும்...

15 நூல்கள் தயாராகின்றன

15 நூல்கள் தயாராகின்றன

பரப்புரைப் பயணத்துக்கு 15 நூல்கள் தயாராகி வருகின்றன. தேவைப்படும் தோழர்கள் பிரதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கக் கோருகிறோம். – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தொடர்புக்கு : 7373684049   பெரியார் முழக்கம் 21042022 இதழ்

ஜெயலலிதாவின் ஆளுநர் எதிர்ப்பும் அ.இ.அ.தி.மு.க.வின் சரணாகதியும்

ஜெயலலிதாவின் ஆளுநர் எதிர்ப்பும் அ.இ.அ.தி.மு.க.வின் சரணாகதியும்

நீட் மசோதா இரண்டாவது முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தற்குப் பிறகும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கிற கடமையி லிருந்து தவறி, தன்னுடைய ஆளுநர் மாளிகை யிலே முடக்கி வைப்பதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் நடத்துகிற தமிழ்ப் புத்தாண்டு தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகளும் இதே முடிவை எடுத்து இருக்கின்றன. ஆனால் இந்த விருந்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அதிமுக அறிவித்திருக் கிறது. சொல்லப்போனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தான், நீட் விலக்கு மசோதாவை அவர் நிறைவேற்றினார். தான் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருப்பதை பார்த்து துளியும் கவலை இல்லை. திமுக எதிர்ப்பு, பாஜக தயவு வேண்டும் என்ற பார்வையோடு அவர் தன்னுடைய கொள்கைகளுக்கு, சமூக நீதிக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பதையும் நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு...

இளையராஜா முன்னுரை எழுதிய நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பின்னணி

இளையராஜா முன்னுரை எழுதிய நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பின்னணி

இளையராஜா, மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு புகழாரம் சூட்டி முன்னுரை எழுதியிருக்கும் புத்தகத்தை வெளியிட்டிருக்கும்  BlueCraft நிறுவனம் பிரதமர் மோடியின் புகழ்பாடும் புத்தகங்களை வெளியிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம். அந்நிறுவனம் இதுவரை  6 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அதன் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராஜேஷ் ஜெயின்  என்பவர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு சோஷியல் மீடியா பிரச்சாரம் மேற்கொண்ட மிக முக்கியமான நபர். மே 25, 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘Mann ki Baat : A Social Revolution on Radio’ என்ற புத்தகம் அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாபிமுகர்ஜியால் வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுதியவர் என்ற இடத்தில ராஜேஷ் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ராஜேஷ் ஜெயின் என்ன சொன்னார் தெரியுமா ? நான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை என்று தெறித்து ஓடினார். இப்படி ஒரு கூத்து உலகில் எங்காவது நடக்குமா? அதாவது இந்தியாவின் குடியரசு...

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம்

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக்கழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் 12.4.2022 செவ்வாய் கிழமை அன்று நயினார்பாளையம் சின்னசேலம், சங்கராபுரம், வாணாபுரம் பகண்டை கூட்ரோடு,ஆகிய நான்கு இடங்களில் ஜாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக  சிறப்பு சட்டம் இயற்றக் கோரி ஒரு நாள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரையில் ஆணவக் கொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பிய பின் கோரிக்கையை விளக்கி பேசப்பட்டது, மாவட்ட தலைவர் க. மதியழகன், மாவட்ட  செயலாளர் க.ராமர், மாவட்ட அமைப்பாளர். சி.சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ், ரிசிவந்தியம் ஒன்றிய செயலாளர் இரா. கார்மேகம், பாக்கம் ராமச்சந்திரன், ரிசிவந்திய ஒன்றிய தலைவர் மா.குமார், மு.குமரேசன், இரா.ஜீவா, கு.பாபா மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் மதன்குமார்,  கடலூர் மாவட்ட அமைப்பாளர் ஆசியஜோதி , விழுப்புர மாவட்ட தலைவர் பூ.ஆ. இளையரசன், திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.     பெரியார் முழக்கம் 21042022...

சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)

சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)

ஏப்.14, 2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள்  கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம். மாநில சுயாட்சியின் அடிப்படை நோக்கம் சுயமரியாதைத் தத்துவம். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்கு, மாநிலங்களின் அடிப்படை உரிமை, பொருளாதாரச் சுதந்திரம், அனைவருக்கும் சமமான சரி நிகர் வாழ்வாதாரம், இன உணர்வு என்ற பல்வேறு கோணங்களில் அர்த்தங்களைப் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக “சுயமரியாதை” என்ற தத்துவமே மாநில சுயாட்சியின் அடி வேராக விளங்குகிறது என உறுதியாகக் கூறலாம். மாநில சுயாட்சி திராவிடத்தின் கொள்கை : 1962 அக்டோபர் வேலூர் சிறையில் இருந்து விடுதலையான பின் மாநில சுயாட்சிக்காக அண்ணா முன் வைத்த முழக்கம் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர அதனைக் கேட்பதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நான் விட்டுவிடவில்லை” என்றார். நமது பள்ளிப்பருவத்திலேயே படித்து இருப்போம் இந்தியா ஒரு மத...

வினா – விடை

வினா – விடை

அயோத்தியா மண்டப லரவு செலவு ஆராய அரசு குழு அமைப்பு. – செய்தி அதுக்கு ‘ஆகமம்’ அனுமதிக்குமா? திருப்பதியில் தங்க ரதத்தில் ஏழுமலையான் பவனி. – செய்தி அதுவும் சரிதான். பெட்ரோல், டீசல் வாகனத்தில் போனால் ஏழுமலையானுக்கு கட்டுப்படியாகாது. ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்தும். – செய்தி அதெல்லாம் ஏற்க முடியாது. கோயில் பிரச்சினைகளில் அரசு தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்; புரிஞ்சுக்குங்க. வரும் தேர்தலில் 25 பா.ஜ.க. எம்.பி.க்கள்; 5 காபினட் அமைச்சர்களைப் பெறுவதே பா.ஜ.க.வின் இலக்கு.             – அண்ணாமலை குடியரசுத் தலைவருக்கு அப்படி ஒரு நியமன அதிகாரம் வழங்கப் போறீங்களா, ஜீ? ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் ‘சூட்சமம்’ என்ன ஆனது? – ஜெயக்குமார் இவுரு வேற; அப்பப்ப குறுக்கும் நெடுக்கும் சைக்கிள்ள வந்து போய்கிட்டு இருக்காரு.   பெரியார் முழக்கம் 21042022 இதழ்

மயக்க மருந்து இல்லாது மனவசியம் செய்து,  அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? எட்வின் பிரபாகரன்

மயக்க மருந்து இல்லாது மனவசியம் செய்து, அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (4) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 6: ராபர்ட் எம். மில்லெர் என்ற விஞ்ஞானி தன்னுடைய தோட்டத்தில் புற்களை வளர்த்தார். பிரார்த்தனை களுக்கு சக்தி உண்டா? என்பதை அறிய ஒரு சோதனையை நடத்தினார். பிரார்த்தனைக்கு பேர் போன ஒல்க வோரல் & அம்புரோசு தம்பதியினரை தன் வீட்டில் பிரார்த்தனை செய்ய அழைத்தார். அவர்கள் பிரார்த்தனை செய்யாத நேரத்தில் 0.00625 அங்குலம் வளர்ந்த புற்கள், பிரார்த்தனை செய்யும் போது, 0.0525 அங்குலம் வளர்ந்ததைக் கண்டார். பிரர்த்தனைக்கு சக்தியுண்டு என்பதை  உணர்ந்து கொண்டார். விடை: முதலில் இது நடந்த சம்பவமா? கற்பனையா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எப்படி யிருப்பினும், தாவரங்களின் வளர்ச்சி எவற்றை சார்ந்து உள்ளது என்பதை இங்கு காண்போம். பொதுவாக, ஒரு தாவரத்தின் வளர்ச்சி,...

தலையங்கம் இலங்கை நெருக்கடி: இந்தியாவுக்கும் எச்சரிக்கை தான்!

தலையங்கம் இலங்கை நெருக்கடி: இந்தியாவுக்கும் எச்சரிக்கை தான்!

ராஜபக்சே குடும்பம் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ‘மக்கள் புரட்சி’ கொழும்பில் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ‘புண்ணுக்கு புணுகு’ பூசுவதுபோல் அமைச்சரவை மாற்றம் என்று நாடகமாடுகிறார். மக்களுக்கு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்க அடுத்த 6 மாதத்துக்கு  அவசரமாக 3 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில் சர்வதேச நிதி நிறுவனத்திடம் ‘பிச்சைப் பாத்திரம்’ ஏந்தி நிற்கிறது, இலங்கை அரசு. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியில் இலங்கையின் மத்திய வங்கி, 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான நெருக்கடிக்கு பொருளாதாரம் உள்ளாகியுள்ளதை எச்சரித்துவிட்டது. சிக்கலிலிருந்து மீண்டு எழும் வழி தெரியாது, இலங்கையின் பொருளாதார ஆலோ சகர்கள் விழிபிதுங்கி நிற்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு நாடே ‘திவாலாகி’க் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி எதை உணர்த்தி நிற்கிறது? நாட்டின் மக்கள் வாழ்வதாரம் – பொருளாதாரம் – வளர்ச்சிக் கட்டமைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு மத வெறி மற்றும் இன வெறியைத் தூண்டி விடுவதில்...

கொளத்தூரில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு கழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி கழக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

கொளத்தூரில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு கழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி கழக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

15.4.2022 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் மாலை 6.00 மணியளவில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா சாதி மறுப்பு இணையர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கொளத்தூர் நகரச் செயலாளர் பா. அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, கொளத்தூர் நகர தலைவர் சி.இராமமூர்த்தி, பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர் தீன ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகிக்க கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமை ஏற்றார். தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் சந்தோஷ் உரையை தொடர்ந்து ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் கார்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் கொளத்தூர் பகுதியில் சாதி மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்திவரும்...

டெல்லிக்கு காவடி எடுத்தது யார்?

டெல்லிக்கு காவடி எடுத்தது யார்?

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட கூடியவர்கள் இரண்டு சதவீதத்திற்கும் குறைவுதான், என்று அமைச்சர் நேரு விளக்கம் அளித்திருக்கிறார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு தமிழகத்தில் சொத்து வரி எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதையும் அரசு விளக்கி இருக்கிறது. இதை எதிர்த்து பாஜக போராடப் போகிறதாம், அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் டீசல் விலையையும், பெட்ரோல் விலையையும் உயர்த்திக்கொண்டே போகின்றவர்கள், சமையல் எரிவாயு விலையை உயர்த்திக்கொண்டே போகிறவர்கள் இப்போது இரண்டு சதவீதம் பேர் கூட பாதிக்கப்படாத சொத்துவரி உயர்விற்கு களமிறங்கப் போவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் சொத்து வரியை எதிர்த்து போர்க் குரல் கொடுக்கிறார். அவரும் சொத்து வரியை 300 மடங்கு உயர்த்தி வெளியிட்டவர் தான். பிறகு தேர்தலில் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக அந்த ஆணையை நிறுத்தி வைத்தவர் தான். எதையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிட வில்லை. முதலமைச்சரின் வெளிநாட்டுப்...

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள். சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன. செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் – தருமபுரி...

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே!  மத வெறியைத் திணிக்காதே!  நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே! மத வெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற – மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் – இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம். இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங் களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”. என்ன நடக்கிறது ? பெட்ரோல் டீசல் விலை...

வினா – விடை

வினா – விடை

சென்னையில் ராமர்கோயில் இருக்கும் அயோத்தி மண்டபத்தை பூட்டு போட்டு பா.ஜ.க.வினர் அதிகாரிகளைத் தடுத்து போராட்டம். – செய்தி ரொம்ப நல்ல சேதி; அப்படியே அயோத்திக்குப் போய் அந்த ராமன் கோயிலுக்கும் பூட்டு போடுங்க; நல்ல சேவை. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகர், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். – செய்தி அது என்ன நிபந்தனையற்ற மன்னிப்பு? அதாவது, ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது என்று அவரது  ஜாதகத்தில் இருக்குன்னு திமிரில் பேசினார் அல்லவா? அப்படி ஜாதகத்தை நம்பியதற்கும் சேர்த்து கேட்பதுதான் நிபந்தனையற்ற மன்னிப்பு; இப்ப புரியுதா? உ.பி. சிறையில் கைதிகளுக்கு காயத்ரி மந்திரம் ஓத பா.ஜ.க. அரசு திட்டம். -செய்தி ஆர்.எஸ்.எஸ்.க்கு ‘தேச பக்தர்’களை பிடிக்க இப்படி ஒரு ‘ரூட்’ இருக்கா? குஜராத் பள்ளிகளில் ‘பகவத் கீதை’ கட்டாயப் பாடம். – செய்தி ‘பாஸ் மார்க்’ வாங்காவிட்டால், தேச விரோதி என்று கூறி பள்ளியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ என்று, ஒரு உத்தரவையும்...

உரிகெல்லர் ‘ஆன்மீக’ சத்தியால் இரும்புப் பொருளை வளைத்தாரா? எட்வின் பிரபாகரன்

உரிகெல்லர் ‘ஆன்மீக’ சத்தியால் இரும்புப் பொருளை வளைத்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (3) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். புதிர் 4: உரி கெல் லெர் என்பவர் 23.11.1973 இல் பிபிசி தொலைக்காட்சியில், உலோகப் பொருள் களை பார்வையாலும், தொடுதலாலும் வளைத்துக் காட்டியது அனை வரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஹெரால்ட் புத்தோஃப், ரஸல் டர்க் ஆகிய ஆன்மீக உளவியல் ஆராய்ச் சியாளர்கள் உரி கெல்லெரை சோதித்துப் பார்த்து, அவரிடம் உள்ள அமானுஷ்ய சக்தியை ஒப்புக் கொண்டனர். இதை எந்த அறிவியல் வல்லுனராலும் விளக்க முடியவில்லை. விடை: மார்க்ஸ் டேவிட் என்ற உளவிய லாளரிடம் இதற்கான பதில் உள்ளது. அவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். அவற்றுள், “The non-psychic powers of Uri Griller” என்ற நூல் புகழ்பெற்றது. 1977இல் எழுதப்பட்ட இந்த நூலில் உரி...

தலையங்கம் அமித்ஷாவின் ‘அடாவடி’

தலையங்கம் அமித்ஷாவின் ‘அடாவடி’

மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர, இனி நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற முடிவை ஒன்றிய ஆட்சி எடுத்திருக்கிறது. இதற்குப் பெயர் CUTE என்பதாகும். இது விளிம்பு நிலை மக்களுக்கு எதிரானது, கோச்சிங் சென்டருக்குத் தான் வழி வகுக்கும். இது இரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 09.04.2022 அன்று ஒரு தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். பாஜக என்ற கட்சியைத் தவிர, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து பேசியிருப்பது, தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறது. உண்மை யிலேயே இது மகிழ்ச்சிக்குரிய செய்தி. பாஜகவினுடைய இந்த இந்தி ஆதரவு, நீட் ஆதரவு நடவடிக்கைகளை தமிழ் மண் ஒருபோதும் ஏற்காது அவர்கள் சட்டமன்றத்தில் நடந்ததைப்போல தனிமைப்பட்டு நிற்கப் போகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நெருப்பை கொளுத்திப் போட்டு இருக்கிறார். “இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்தை அலுவல் மொழி நிலையிலிருந்து படிப்படியாக ஒழிக்க வேண்டும்” என்று...

பெரியார் – அம்பேத்கர் – திராவிட மாடலில் தத்துவ நாயகர்களாக தமிழக அரசு ஏற்றுள்ளது அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்

பெரியார் – அம்பேத்கர் – திராவிட மாடலில் தத்துவ நாயகர்களாக தமிழக அரசு ஏற்றுள்ளது அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்

*           அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்படும். *           திமுக துணை பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா கோரிக்கையை ஏற்று, அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து தமிழக அரசால் செம்பதிப்பாக வெளியிடப்படும் *           விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கோரிக்கையை ஏற்று, அம்பேத்கர் மணிமண்டபத்தில், அம்பேத்கரின் வெண்கல முழு உருவச்சிலை நிறுவப்படும். போன்ற அறிவிப்புகளை, 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.04.2022 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். பெரியார் முழக்கம் 14042022 இதழ்

கொளத்தூர் மணி – விடுதலை இராசேந்திரன் விளக்கம் அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்துவதே ‘திராவிட மாடல்’

கொளத்தூர் மணி – விடுதலை இராசேந்திரன் விளக்கம் அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்துவதே ‘திராவிட மாடல்’

‘சன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘திராவிட  மாடல்’ குறித்து விளக்கினார். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகிற போதெல்லாம் அடிக்கடி “திராவிட மாடல்” என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அது குறித்த பல்வேறு, கேள்விகளும், விமர்சனங்களும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பு பெறாத மக்கள் கூட்டத்திற்கு அரசின் அனைத்தை யும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற முடிவு, ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்டது தான் ‘சைமன் கமிசன்’. அப்போது, தமிழ்நாட்டு அரசியலில், அதாவது சென்னை மாகாண அரசியலில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் (நீதிக் கட்சி) தொடங்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள், பெரும் பணக்காரர்களும், மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தாலும், இயக்கத்தின் நோக்கமாய் அவர்கள் கூறியது, “அனைத்து மக்களுக்குமான சேவைகளை கொண்டு போய் சேர்ப்பது தான்”. இன்னும் சொல்லப்...

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

தலைமைக்குழு செயலவை நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி முன்னின்று ஒருங்கிணைத்தார். அவருடன் ஈரோடு மாவட்டத் தோழர்கள் இணைந்து பணியாற்றினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ரூ.10,000; ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி ரூ.5,000,  ஈரோடு சீனிவாசன் ரூ.5000, பொறியாளர் அன்பு செல்வன் ரூ.10,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். பிரியாணிபாளையம் ஓட்டல் உரிமையாளரும் கரூர் மாவட்ட கழக முன்னாள் மாவட்ட தலைவருமான பாபு, தலைமைக் குழுவுக்கு இடம் வழங்கி மிகக் குறைந்த விலைச் சலுகையில் இரு நாளும் பிரியாணி உணவு வாங்கினார். சென்னிமலை கழகத் தோழர் ஜோதி ரவி 15 கிலோ இறைச்சியையும், ‘அன்பு மிக்சர்’ உரிமையாளர் அனைவருக்கும் சிற்றுண்டிகளையும் தின்பண்டங் களையும் வழங்கினார். கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் செயலவைக் கூட்டம் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினர்.  அனைவருக்கும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி தெரிவித்துக் கொள்கிறார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் :  400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் : 400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

தமிழ்நாட்டின் பறிக்கப்படும் உரிமைகள், ஒன்றிய ஆட்சியின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை; மறுக்கப்படும் ‘நீட்’ விலக்குச் சட்டம்; திணிக்கப்படும் மதவெறி; அதற்கு கருவிகளாகப் பயன்படும் மக்களின் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை விளக்கி ‘திராவிடன் மாடல்’ அதுவே நமக்கான அடையாளம் என்பதை விளக்கி, 11 மண்டல மாநாடுகளையும் மாவட்டத்துக்கு குறைந்தது 15 தெருமுனைக் கூட்டங்களையும் நடத்த திவிக செயலவை முடிவு செய்துள்ளது. பெரியார் முழக்கம் 07042022 இதழ்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

தி.வி.க. செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1000/- நன்கொடை வழங்குவது என்று செயலவையில் முடிவெடுக்கப்பட்டது. செயலவை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியதோடு மூன்று பேர் உடனடியாக நன்கொடையையும் வழங்கிவிட்டனர். இது தவிர கழகத்தின் முழு நேர செயல்பாட்டாளர்களை நியமிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான செலவை தோழர்கள் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர். அதன்படி தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஆசிரியர் சிவகாமி, இராம இளங்கோவன், நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சேலம் டேவிட் ஆகியோர் முழு நேரப் பணியாளர் நியமன திட்டத்துக்கு மாதம் ரூ.1000/- வீதம், வருடத்துக்கு ரூ.12,000/- வழங்குவதாக அறிவித்தனர். திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, காவை ஈசுவரன் முழுநேரப் பணியாளர் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000/- வழங்குவதாக அறிவித்தனர். நாமக்கல் மாவட்டக் கழக சார்பில் மூன்று செயலவை உறுப்பினர்கள், செயலவை உறுப்பினருக்கான கட்டணமாக ரூ.1000 செலுத்துவதாகவும், முழு நேரப் பணியாளர் திட்டத்துக்கு...

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்நாட்டரசின் 2022 திருவள்ளுவர் விருதாளரும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அனைத்து இந்திய தமிழ்ச் சங்க பேரமைப்பின் தலைவரும், திராவிடர் கழகத்தின் மூத்த  கருஞ்சட்டைத்  தோழருமான மு.மீனாட்சி சுந்தரம் (முத்து செல்வன்) நினைவேந்தல் நிகழ்வு 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பெங்களூர் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில், பெங்களூர் தமிழ்ச் சங்கம்  நடத்தியது. இந்நினைவேந்தல் நிகழ்வுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கோ. தாமோதரன் தலைமை தாங்கினார்.  திராவிடர்  விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீனாட்சி சுந்தரத்தின் (முத்து செல்வன்) உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சானகிராமன், க.த.ம.இ. தலைவர் சி. இராசன்,  பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் அமைப்பாளர் கி.சு. இளங்கோவன், கருநாடக திமுக அமைப்பாளர் இராமசுவாமி, உ.த.க. தலைவர் மதலைமணி, மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ்,...

செயலவையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா தொகையாக வரவு ரூ. 1,12,950/-

செயலவையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா தொகையாக வரவு ரூ. 1,12,950/-

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்காக ‘சந்தா’ கணக்குகளை முடித்து, கோவை, ஈரோடு (தெற்கு), மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நாமக்கல், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், பேராவூரணி, நெல்லை, தோழர்கள் ஏற்கனவே தரவேண்டிய தொகை மற்றும் புதிய சந்தாக்கள் முகவரி இதழ்களின் தொகையைச் சேர்த்து ரூ.1,12,950/-ஐ செயலவையில் வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் மகாலிங்கம், தனது பேரனின் ஜாதி மறுப்பு திருமண மகிழ்வாக ரூ.1000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். 21ஆம் நூற்றாண்டில்கூட இலங்கையின் பொருளாதார எதிர்காலம் தேயிலை, ரப்பர், ஏலம், மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியைச் சுற்றியே தொடர்ந்து பிணைந்திருக்கிறது. தேயிலை – ரப்பர் போன்ற பிரதான பொருள்களின் ஏற்றுமதி, சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம், வெளிநாடுவாழ் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த வருமானம் ஆகியவற்றின் மூலமே அது தனக்குத் தேவைப்பட்ட அன்னியச் செலாவணியைப் பெற்றுவந்தது. அந்த அன்னியச் செலாவணியைக் கொண்டுதான் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டது. இருபத்தாறு ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் 2009இல் இராணுவ ஒடுக்குமுறையில் முடிவுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2013-க்குப் பிறகு உலக அளவில், பண்டங்களுக்கான சந்தை...

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாய் வாலை வெட்டி, ‘நாய்க்கு’ சூப் தயாரிக்கும் ஒன்றிய ஆட்சி

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாய் வாலை வெட்டி, ‘நாய்க்கு’ சூப் தயாரிக்கும் ஒன்றிய ஆட்சி

மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவுகளை மக்களிடமிருந்தே வரியாக வாரிச் சுருட்டும் மோடி ஆட்சி. ‘கோடீஸ்வரர்கள்’ மேலும் கொழுக்க வரிச் சலுகை வாரி வழங்கி, அவர்களை ‘இந்துத்துவா’வுக்குப் பா.ஜ.க. வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை ப. சிதம்பரம் விளக்குகிறார். வரிகள், நல்வாழ்வு, தேர்தல் வெற்றி ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்க வழி கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சூழ்ச்சித் திறனை நாம் பாராட்டியே தீர வேண்டும். தேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம், சலுகைசார் முதலாளித் துவம், ஊழல் ஆகிய மூன்றையும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான புதிய முறை என்கிற திட்டத்தின் மூலம் இணைத்து, இதில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை எனும் மாயை உருவாக்கியதைப் போலவேதான் முன்னதிலும் செய்திருக்கிறது. முதல் மூன்று அம்சங்களுக்கு மீண்டும் வரு வோம். வரிகள், நல்வாழ்வு, வாக்குகள் பற்றியது அது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார அடித்தளக் கட்டமைப்பில்...

‘இந்து’ ஏட்டின் கட்டுரை கடவுள்களும் காம்ரேட்களும்

‘இந்து’ ஏட்டின் கட்டுரை கடவுள்களும் காம்ரேட்களும்

இந்து கோவில் திருவிழாக்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் இனி அத்தகைய விழாக்களில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சி.பி.அய்.எம் தமிழ் மாநில செயலாளர்  பாலகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறினார். திராவிடர் விடுதலைக் கழகமும், திராவிடர் கழகமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரினர். நோக்கம் சிறந்தது என்றாலும் இந்த செயல் மார்க்சிய தத்துவத்திற்கு முரணானதாக உள்ளது என்று திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டியதோடு, இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் என்று கருத்து தெரிவித்தார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டிற்குப் பிறகு செய்தி யாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ‘கோவில் வழிபாடு, பூஜை, சடங்குகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரடியாக பங்கேற்க மாட்டார்கள்’ என்றும், “கட்சியினுடைய ஆதரவாளர்கள் கோவில் நிர்வாகங்களில் பங்கேற்று, நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளில் மதச்சார்பின்மை கொள்கையை வலியுறுத்தி...

துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்

துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (2) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடு கிறோம். புதிர் 3: கனவுகள், அறிவியல் கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக இருந் துள்ளன. Benzene மூலக்கூற்றின் வடிவத்தை ஃப்ரடரிக் வோன் தன் கனவிலேயே முதலில் கண்டார். நரம்பு அதிர்வுகள் மின்சக்தியாக கடத்தப்பட வில்லை; ரசாயன மாற்றங்களாகத் தான் கடத்தப்படுகின்றன என்று ஓட்டோ லூயி கண்டுபிடித்ததும் கனவில் தான். தையல் இயந்திரத் தின் வடிவமைப்பு, எலியஸ் ஹோவேயின் கனவில் தான் முதலில் வந்தது. துப்பாக்கி ரவை செய்யும் தொழில் நுட்பத்தை ஜேம்ஸ் வாட் கனவாகக் கண்டார். இத்தகைய கனவு களுக்கு அறிவியலில் விளக்கம் இல்லை. விடை: உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃபிராய்ட், “ஆழ்மனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே கனவுகள் வருகின்றன” என்றார். தற்கால உளவியல் ஆராய்ச்சி யாளரான டெயர்ட்ரே பாரெட், மூளை...