துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (2)
‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடு கிறோம்.
புதிர் 3: கனவுகள், அறிவியல் கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக இருந் துள்ளன. Benzene மூலக்கூற்றின் வடிவத்தை ஃப்ரடரிக் வோன் தன் கனவிலேயே முதலில் கண்டார். நரம்பு அதிர்வுகள் மின்சக்தியாக கடத்தப்பட வில்லை; ரசாயன மாற்றங்களாகத் தான் கடத்தப்படுகின்றன என்று ஓட்டோ லூயி கண்டுபிடித்ததும் கனவில் தான். தையல் இயந்திரத் தின் வடிவமைப்பு, எலியஸ் ஹோவேயின் கனவில் தான் முதலில் வந்தது. துப்பாக்கி ரவை செய்யும் தொழில் நுட்பத்தை ஜேம்ஸ் வாட் கனவாகக் கண்டார். இத்தகைய கனவு களுக்கு அறிவியலில் விளக்கம் இல்லை.
விடை: உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃபிராய்ட், “ஆழ்மனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே கனவுகள் வருகின்றன” என்றார். தற்கால உளவியல் ஆராய்ச்சி யாளரான டெயர்ட்ரே பாரெட், மூளை யில் ஏற்படும் ரசாயன எதிர்வினை களால் தான் கனவுகள் உருவாகிறது என்று கண்டு பிடித்துள்ளார். இந்த எதிர்வினை களுக்கும், நம்முடைய சிந்தனைகளுக்கும் தொடர் புண்டு. நீண்ட நாட்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானிக்கு, அவருடைய ஆராய்ச்சி யோடு தொடர்புடையவை கனவாக வர வாய்ப்புகள் அதிகம். எனவே ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் தான் கனவுக்கும், அறிவியல் கண்டுபிடிப்பு களுக்கும் அடிப்படையே தவிர, கனவுகள் கண்டுபிடிப்பு களுக்கு அடிப்படையாகாது. அமெரிக்க அதிபர் கென்னடி யின் கொலையை முன் கூட்டியே கனவில் கண்டதாக கருதப்பட்ட ஜீயேன் டிக்சனுடைய பல கனவுகள் பொய்யாகிப் போயுள்ளன. பார்ப்பனர்களை எதிர்த்தால் நீங்கள் கொல்லப்படுவீர் என்று காந்தியிடமே பெரியார் கூறியதற்கு பின்னால், எந்த தெய்வீக சக்தியும் இல்லை. மாறாக, சமூக, அரசியல் அறிவே இருந்தது. அதைப்போலவே தான் கென்னடியின் மரணத்தை கணிக்க கனவுகள் தேவை யில்லை. அரசியல் அறிவே போதும். கனவுகளில் பெரும்பாலானவை பலிப்ப தில்லை.
(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)
(தொடரும்)
பெரியார் முழக்கம் 07042022 இதழ்