அன்னையே வாழ்க!
அன்பே அருளே அறிவே எமையே ஆட்கொண் டியக்கு கின்ற ஆற்றலே! பண்பே பரிவே திருவே மனிதன் பகுத்துணரக் கற்பித்த எந்தன் பகவனே! மாண்பே மருவிலா வித்தே வியப்பே மனிதப் பரிணாம வார்ப்பின் ஆதியே! மனித மாண்பின் மின்னோட்ட விசையே மானவாழ்வை மீட்டளித்த எந்தையே வாழி! என் சொல்வேனையா! என் செய்வேனையகோ எம்மக்கள் இன்னும் தூங்குகின் றாரே! கொடிய பகைவரிட மெல்லா மிழந்தே கையேந்தி இறைஞ்சி வாழுகின் றாரே! அடிமைதாமென் றாரியர் காலைத் தொழக்கண்டு அகிலம் நகைத்திடல் அறியா துள்ளாரே! விடிவிலையோ எம்மின இழிவிற்கே விந்தையோ! விடுதலை உணர்வினை இழந்தார் அந்தோ! துணைசெய்யப் போராடித் தடுத்தாட் கொள்ள துணிந்தா ரில்லை உமைப்போல் எவருமே! ஓற்றுமையு மில்லையே பதவி இரைகாட்டி கண்ணி வைத்தே பார்ப்பான் காத்துள்ளானே! குடியும் தமிழும் அழியுமோ அய்யகோ! உனைமறந்தார் உயிரை மறந்தது போலே! பிணமென்றே எண்ணி நாயும் நரியும் பிய்த்திழுத்துத் தின்னக் காத்துள் ளனவே! தூண்டிலை மறந்தே தண்ணீரைப் பழிக்கும்...
