தமிழர்கள் மதுவிற்கு அடிமையாவது ஏன்? அரு. கோபாலனின் ‘அரிய’ கண்டுபிடிப்பு
தமிழர்கள் மதுப் பழக்கத்துக்கு ஆளாவதற்குக் காரணம், தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆட்சி இல்லையே; அந்நியர் ஆட்சி நடக்கிறதே என்ற கவலைதான் என்ற “அரிய” கண்டுபிடிப்பை தனது ‘எழுகதிர்’ ஏட்டில் எழுதியிருக் கிறார், அரு. கோபாலன்.
“நம்மைப் பொறுத்தவரை உலகில் எந்த நாட்டுக்கு மதுவிலக்குத் தேவையோ இல்லையோ! தமிழ்நாட்டுக்குக் கட்டாய முழு மதுவிலக்கு தேவை, தேவை, தேவை.
ஆம்; ஆயிரம் ஆண்டுக்கும் மேலாகச் சொந்த ஆட்சி இல்லாமல் எவரெவருக்கோ அடிமையாகவுள்ள தமிழன் அடிமனத்தில் ஒருவித ஏக்கம் படிந்து, அது அவனை அலைக்கழிக்கிறபோதெல்லாம் அவன் தன்னை மறந்து ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கவே விரு(ம்புகிறான். அந்த விருப்பம் அவனை மதுவுக்கு அடிமையாக்குகிறது.
அதனால்தான் இந்தியாவின் பிற மாநிலங்களில் எங்கும் தமிழைக் காண முடியாவிட்டாலும், மதுக்கடைகளில் மட்டும் தப்பும் தவறுமாகவாவது ‘சரயக்கட’, ‘மதுக்கிட’ என்பது போன்று தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள்.”
‘எழுகதிர்’ ஜூன் 2017, பக்.20
இப்படி ஒரு ஆராய்ச்சிக்காக ‘நோபல்’ பரிசே வழங்கலாம்!
பெரியார் முழக்கம் 22062017 இதழ்