ஜெயேந்திரன் மீது நடவடிக்கைக் கோரி புதுவையில் போராட்டம்
6-6-2017 புதுச்சேரி – சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 6-6-2017 அன்று காலை 11 மணியளவில் மாநிலக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்தில் பல்வேறு இயக்கங் களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டு பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீது புதுவை அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவாக உள்ளநிலையிலும், அவரது வாக்குமூலத்தின் வழியாக தெரியவந்து கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித் திருந்தும் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ள நிலையிலேனும் மேல்முறை யீட்டுக்கோ, மீள்விசாரணைக்கோ உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் 29062017 இதழ்