காமராசர் : சமூக நீதியின் சரித்திரம்: தமிழர்கள் எடுக்கும் நன்றிப் பெருவிழா
பச்சைத் தமிழர் என்று பெரியாரால் பாராட்டப் பட்டவர் காமராசர்; அவர் ஆட்சி காலத்தில் தான் இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) கொண்டு வந்த அப்பன் தொழிலை மகனுக்குக் கல்வியாகக் கற்றுத்தர வேண்டும் என்ற குலக்கல்வி திட்டம் ஒழிந்தது; கிராமங்கள் தோறும் – ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிக் கூடங் களும் இலவசக் கல்வியும் – மதிய உணவுத் திட்டமும் தீவிரமாக அமுல்படுத்தப் பட்டது; தொழில் வளர்ச்சி பெருகியது.
காமராசர் அகில இந்திய கட்சியான காங்கிரசில் இருந்தாலும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துடனேயே பெரியார் கொள்கைகளை ஏற்று சமூக நீதிக்கான பாதையில் நடை போட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்தும் பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது மதச்சார்பற்ற ஆட்சிக்கு – கட்சிக்கு எதிரானாது என்று எதிர்த்தார்; அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகள், நிர்வாண சாமியார்கள் புதுடில்லியில் அவரை வீட்டுக்குள்ளே வைத்து உயிருடன் எரிக்க திரண்டனர். உதவியாளர் உதவியுடன் உயிர் தப்பினார்.
காமராசர் பிறந்த நாளில் அந்த வரலாறுகளை நினைவு கூறுவதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருமை அடைகிறது. இது காலத்தின் தேவையாகிறது.
வரலாற்றை நினைவுகூர்ந்து உரையாற்றுவோர் :
கொளத்தூர் மணி – “பெரியாரும் காமராசரும்”; பழ. கருப்பையா – “காமராசரும் சமூக நீதியும்”; விடுதலை இராசேந்திரன் – “காமராசரின் இன்றைய தேவை”.
ஜூலை 15 சனிக்கிழமையன்று சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விரட்டு கலைக் குழுவினரின் சமூகநீதி-ஜாதிஎதிர்ப்பு கலை நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி துவங்கும்.
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பெரியார் முழக்கம் 06072017 இதழ்