ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் ஜெ.சி.பி.  பணிமனையில்  மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி,

ஜூன் 24 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம், ஜூன் 25 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர், ஜூன் 26 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, ஜூன் 27 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேசன், ஜூன் 28   – மரப்பாலம், கோணவாய்க்கால், ஜூன் 29 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம், ஜூன் 30 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம், ஜூலை 1 – ஆர்.என் புதூர், சி.எம் நகர், ஜூலை 2 – சூளை, கனிராவுத்தர் குளம், ஜூலை 3 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்.

தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மற்றும் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிக்கு காவை இளவரசன் மற்றும் ஆத்தூர் மகேந்திரன் ஆகியோரை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடலில், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, சசி, இசைக்கதிர், சின்னதம்பி, சத்யராஜ், முத்துப்பாண்டி, சரவணன், ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 22062017 இதழ்

You may also like...