மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து குமரி குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்

நடுவண் பி.ஜே.பி.அரசின் மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக குலசேகரம் சந்தை, காமராசர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 21-06-2017புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. மோ.விஸ்ணு வரவேற்புரை யாற்றினார். மணிமேகலை (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டத் தலைவர்) முன்னிலை வகித்தார். தமிழ் மதி (திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர்), இளங்கோ, போஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர். நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர்) தலைமை தாங்கினார். தோழர்கள் இடையிடையே மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான கண்டன முழக்கங்களை முழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சூசையப்பா, சுனில் குமார், ஜாண் மதி, இரமேஸ் பாபு, இராஜேஸ் குமார், மஞ்சு குமார், ஆற்றூர் அருள் ராஜ், சமூக ஆர்வலர்கள், அசோக், சோனி மோன், சிக்கு, ஜோதி குமார், விஸ்ணு, மதியழகன், சாந்தா, மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த ஜெயன், மார்க்சிஸ்ட் யுனிவர்சலை சார்ந்த இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனீசு நன்றி கூறினார். முன்னதாக பசுவைப் பற்றி சாவர்க்கர், விவேகானந்தர் சொன்ன கருத்துகள் அடங்கியத் துண்டறிக்கைகள் குலசேகரம் பகுதி முழுவதும் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 13072017 இதழ்

You may also like...