கோட்டாரில் கழகம் எடுத்த பாரதிதாசன் விழா

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு கோட்டார் மணிமேகலை இல்லத்தில் சூசையப்பா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மணிமேகலை வரவேற்புரையாற்றினார் நீதிஅரசர், தமிழ் மதி, இளங்கோ, சுனில்குமார், வின்சென்ட், மணிமேகலை ஆகியோர் பாவேந்தர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒளிவெள்ளம் ஆசிரியர் பிதலிஸ் வாழ்த்திப் பேசினர். மாணவிகள் ரித்திகா, மோனிகா, ஆசிகா ஆகியோர் பாரதிதாசன் கவிதைகளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு கழகம் சார்பாக பெரியாரின் உயர் எண்ணங்கள் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. சத்தியராணி நன்றிகூற கூட்டம் முடிவுற்றது. பின்பு கோட்டார் சந்திப்பில் பாவேந்தர் பாரதிதாசன் படத்தின் முன்பு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பெரியார் முழக்கம் 29062017 இதழ்

You may also like...