பசுக் காவலர்கள் எங்கே?
புதுடில்லியிலிருந்து பாரத் டோகரா என்ற வாசகர், ‘எக்னாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ வார ஏட்டுக்கு (ஜூன் 3, 2017) ‘பசு பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதம்:
“மே 22, 23 தேதிகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் புண்டல்காண்ட் பகுதியி லுள்ள திக்காமார்க் மாவட்டத்தில் 3 கிராமங்களுக்கும், உ.பி.யில் லித்பூர் மாவட்டத்திலுள்ள 3 கிராமங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ளச் சென்றிருந்தேன். கடந்த 3 மாதங்களாக வயல்களிலும் மாட்டுப் பண்ணைகளிலும் பசு மாடுகள் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக செத்துக் கொண்டே இருப்பதாக கிராம மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இப்படி 3 மாதங்களில் இறந்த மாடுகள், குறிப்பாக பசுக்கள், 500க்கும் அதிகம் என்று கிராம மக்கள் கூறினர். இதற்காக எந்த சிறப்பு நடவடிக்கைகளையும் பசு பாதுகாவலர்கள் எடுக்க முன்வர வில்லை. ஏரி, குளங்களும் வறண்டு போய் கிடப்பதாக மக்கள் கூறினார்கள். பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்களைத் தாக்கும் பசு பாதுகாவலர்கள் தண்ணீரின்றி ஆயிரக் கணக்கான பசுக்கள் செத்து மடிவதைத் தடுக்காமல் எங்கே போனார்கள்?” – என்று அந்த வாசகர் கேள்வி எழுப்பி யுள்ளார்.
பெரியார் முழக்கம் 29062017 இதழ்