திருச்செங்கோட்டில் கழக சார்பில் ‘கக்கூஸ்’ ஆவணப் படம் திரையீடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் கடந்த வாரம் ஜீலை 2ஆம் தேதி, தோழர் திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், நாமக்கல் மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி மற்றும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கழக பொறுப்பாளர்கள் மற்றம் தோழர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு முடிந்தவுடன் “நிமிர்வோம்” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆவணப்படத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 09.07.2017 அன்று திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட்டது. கருவேப்பம்பட்டி பகுதி  மணி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 20072017 இதழ்

You may also like...