சமூக நீதிப் பயணம் – சென்னை மாவட்டம் தயாராகிறது

23.07.2017 மாலை 6 மணிக்கு சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக யுவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் ஆகஸ்ட் 05, 2017 தொடக்க பொதுக்கூட்டம் முதல் ஆகஸ்ட் 12, 2017 மாலை திருசெங்கோட்டில் நடைபெறவிருக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டம் வரை தமிழ்நாடு முழுவதும் “சமூக நீதிப் பரப்புரை பயணம்” குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, 28.07.2017 வடசென்னை, திருவேற்காடு பகுதியில் “வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், கடந்த 15.07.2017ல் நடைபெற்று முடிந்த காமராசர் விழா பற்றியும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில், அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். வேழவேந்தன் (சென்னை மாவட்ட தலைவர்) நன்றி தெரிவித்தார்.

பெரியார் முழக்கம் 27072017 இதழ்

You may also like...