உடல் மருத்துவக் கல்லூரிக்கு கொடை: குமரி மாவட்ட எல்லைப் போர் வீரர் செல்லம் முடிவெய்தினார்
குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில் போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர் செல்லம் (அகவை 80), தொடுகுளம், காஞ்சிரகோடு, 16.06.2017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில் நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, ‘மார்த்தாண்டம் மாலை’ பத்திரிகை ஆசிரியர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஷ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேம லதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன் அவரின் இறுதி விருப்பப்படி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியியல் துறைக்கு உடல் வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 22062017 இதழ்