சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் : மாநாட்டு அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்தனர்

திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 15.6.2017 மாலை 7 மணியளவில் தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கூடியது. ஜூன் 4ஆம் தேதி கழகத்தின் மாநாடு, ஜூன் 5ஆம் தேதி நடந்த இந்தி அழிப்புப் போராட்டம் குறித்தும் மாநாட்டில் நிறை குறைகளை தோழர்கள் விவாதித்தனர். குறிப்பாக மாநாட்டையொட்டி 15 நாட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி, ரூ.10, 20 என்று நன்கொடை திரட்டியபோது மக்களிடமிருந்து வந்த கேள்விகள், பாராட்டுகள், ஆதரவுகள் அதன் வழியாகப் பெற்ற அனுபவங்களைத் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். மாநாட்டு வசூல் பணியில் பங்கேற்ற வடசென்னை பெண் தோழர் ராஜீ மற்றும் விவேக், மாணவர் கழகப் பொறுப்பாளர் ஜெயப் பிரகாசு, பிரபாகரன், யுவராஜ், இராவணன், அய்யனார், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை அருண் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, மாநாட்டு வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இந்த மாநாட்டை முழுமையாகப் பொறுப்பேற்று செயல்பட்ட இளம் தோழர்களையும் அவர்கள் ஒன்றுபட்ட தோழமை உணர்வோடு களப்பணியாற்றியதையும்  பாராட்டினார். தமிழ்நாட்டுக்கு தனி அரசியல் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த சென்னை மாநாட்டில் கழகம் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இந்த மாநாட்டின் வரலாற்றுச் சிறப்பு என்று குறிப்பிட்டார். மாவட்ட தலைவர் வேழவேந்தன் நன்றி கூறினார்.

சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் அறிவிக்கப்பட்டார்கள்:

விவேக் (தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), வில்லிவாக்கம் செந்தில் (வடசென்னை மாவட்ட செயலாளர்), ராஜீ (அறிவியல் மன்ற அமைப்பாளர்). திருவல்லிக்கேணி பகுதி கழகம் : இலட்சுமணன் (தலைவர்), அருண் (செயலாளர்), பிரபாகரன் (அமைப்பாளர்). திருவான்மியூர் பகுதி : தேன்ராஜ் (அமைப்பாளர்)

பெரியார் முழக்கம் 22062017 இதழ்

You may also like...