திருப்பூரில் எழுச்சியுடன் நடந்த காமராசர் விழா

திருப்பூரில் காவல்துறை ஒலி பெருக்கியை சரியாக இரவு 10 மணிக்கு துண்டித்தது. அதன் பிறகு ஒலிபெருக்கி இல்லாமலேயே கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய காட்சி

whatsapp-image-2017-07-16-at-23-40-06

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா – பொதுக் கூட்டம்” 16.07.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் தெற்கு பகுதி செயலாளர் மா இராமசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளத்தூர் நாவலரசு கலைக் குழுவினர் சமூக நீதி பாடல்களை பாடி மக்களை எழுச்சியூட்டினர்.

அதன் தொடர்ச்சியாக,  திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் “கல்விவள்ளல் காமராசரின் வரலாறு மற்றும் தற்கால நீட் தேர்வு சீரழிவு” பற்றி சிறப்பாக பேசினார்.

முகில்ராசு (திருப்பூர் மாவட்ட தலைவர்) பொதுக் கூட்டத்திற்கான தொடர் களப்பணியில் ஈடுபட்ட தோழர்களை பாராட்டி, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரை யாற்ற வந்திருந்த பேச்சாளர்களை வரவேற்றும், பொதுக் கூட்டத்திற்காக உதவிய பகுதி மக்களுக்கு நன்றி கூறியும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங் கிணைத்தார். காவை இளவரசன், ‘மந்திரமல்ல, தந்திரமே’ நிகழ்ச்சி, 30 நிமிடங்கள் பார்வை யாளர்களை கட்டிப் போட்டு, பகுத்தறிவு கருத்துகளை பரப்பியது.

அதன்பின் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. சிவகாமி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் சபரி, மடத்துக்குளம் மோகன், தனபால் ஆகியோர் காமராசரின்  பொற்கால ஆட்சியை பொது மக்களுக்கு நினைவுப் படுத்தினார்கள். பொருளாளர் திருப்பூர் துரைசாமி இரத்தின சுருக்கமாக காமராசரின் ஆட்சித் திறனையும் கல்விப் பணிகளையும் விதந்தோதி மக்களை சிந்திக்க வைத்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார்-காமராசர் கொள்கை உறவுகளை விரிவாக விளக்கினார்.

காவல் துறை 10 மணிக்கு கண்டிப்பாக பொதுக் கூட்டத்தை நிறுத்தச் சொன்னதால், கழக தலைவர் கொளத்தூர் மணி ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு உரையாற்ற ஆரம்பித்தார். வழிபாட்டு நிலையங் களிலும் இது போன்றதொரு  போக்கினை பின்பற்ற காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்து மேடைக்கு விளிம்பில் நின்று தன் உரையை தொடர்ந்தார். பொதுமக்களும் உரையை மேடைக்கு அருகில் வந்து ஆர்வமுடன் கேட்டார்கள். 15 நிமிடங்களுக்கு மேலாக விறுவிறுப்பான செய்திகளோடு திருப்பூரில் கல்வி வள்ளல் காமராசர் 115வது பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது

செய்தி: க. விஜய்குமார்

பெரியார் முழக்கம் 20072017 இதழ்

img_3651 img_3646

img_3643

You may also like...