ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு

மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் குமரி மாவட்ட வருகையைக்  கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017 சனிக்கிழமை) காட்டச் சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைது செய்து பிணை வழங்காமல்

15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போட வைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும், மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாகச் செயல்படு வது வருந்தத்தக்கது என்று குமரி மாவட்டக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரியார் முழக்கம் 13072017 இதழ்

You may also like...