‘பசு’ச் சட்டத்தை எதிர்த்து திருச்செங்கோட்டில் கழகம் முற்றுகைப் போராட்டம்

சந்தையில் இறைச்சிக்கான மாடு விற்கத் தடை என்ற மத்திய அரசின் ஆணையை நீக்க வலியுறுத்தி, கடந்த மே மாதம் 31 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின்சார்பில் திருச்செங்கோடு  பாரத ஸ்டேட் வங்கி முன்  முற்றுகைப் போராட்டம் நடந்தது.

நிகழ்வுக்கு மாவட்ட அமைப் பாளர் வைரவேல் தலைமையேற்றார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் திருச்செங்கோடு, பள்ளி பாளையம், மல்லை பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் உட்பட 21பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு மாலை 6 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

பெரியார் முழக்கம் 22062017 இதழ்

You may also like...