‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி
நீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப் பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவி களுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில்...
