குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் NRC மற்றும் CAA திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய மாநில அரசை வலியுறுத்தி 23.12.19 திங்கள் கிழமை தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. பிரசாந்த் (நகரச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கார்த்திகா, பவானி முன்னிலை வகித்தனர். தேன்மொழி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சம்சீர் அக்மத் (மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), முகமது சஹீத் (மாநில ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக மாணவர் பேரவை), அஸ்லாம் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி) ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலுக்கு எதிராக கண்டன உரையை பதிவு செய்தனர். திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திருவள்ளுவர் பேரவை அருண், திவிக தோழர்கள்...
