மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வரும்.  வேலை வாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டுப் பண்பாட்டில் மூழ்கச் செய்யும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது.

இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு  வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

– பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம்

பெரியார் முழக்கம் 26092019 இதழ்

You may also like...