நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

தமிழ்நாட்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு,  வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலை வாய்ப்புகளில் 15 மட்டுமே கிடைத்த நிலையில், குஜராத்தியர்  புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டு குஜராத்திகளுக்கே வேலை வழங்கக் கோரியது.

அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் 1995 முதல் குஜராத்தில் நடைமுறையில் இருப்பதையும், அந்த கொள்கையை சுட்டிக்காட்டியே மேற்குறிப்பிட்ட வழக்கில் குஜராத் அரசு வழக்காடியது என்பதையும் இம்மாநாடு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

– பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம்

பெரியார் முழக்கம் 26092019 இதழ்

You may also like...