ஒன்றுபட்ட தமிழகம் – 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை 161ஆவது விதியின் கீழ் இராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதை வரவேற்று பாராட்டுகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு அதிசயமாக தமிழக அரசின் இந்த முடிவை அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒருமித்து வரவேற்றிருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு பொதுக் கருத்தை தமிழ் மண்ணின் உணர்வாக மாற்றியது கடந்த காலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பரப்புரைகளும் போராட்டங் களும், செங்கொடியின் உயிர்த் தியாகமும்தான். சமுதாயத்தைப் பக்குவப்படுத்தி விட்டால் சட்டம் அதன் பின்னால் ஓடி வரும் எனும் சமூகவியலை இது மெய்ப்பித்திருக்கிறது. இதுவே இந்த மண்ணை சமூகநீதிக்கும் சுயமரியாதைக்குமான விளைச்சல் பூமியாக்கிட பெரியார் பின்பற்றிய அணுகுமுறையும்கூட! மாநில அரசுக்கு அரசியல் சட்டப் பிரிவு 161இன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு கூட்டாட்சி அமைப்பில் மாநில இறையாண்மையை உறுதி செய்கிறது. இதே வழக்குகளில்...