பா.ஜ.க. ஆட்சியில் சட்ட வரம்புகளை மீறும் ஆளுநர்கள்
நக்கீரன் எழுதிய கட்டுரைக்காக தமிழக ஆளுநர்மாளிகை, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீது காவல்துறையில் நேரடியாக புகார் தந்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் 124அய் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் இந்த சட்டத்தில் பிணை கிடைக்காமல் தடுப்பதற்கும் பிடிவாரண்ட் இன்றி கைது செய்வதற்கும், ஆளுநர் இந்தக் கொடூர சட்டத்தைக் கையில் எடுத்தார். எழும்பூர் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டம் வழக்குக்குப் பொருந்தாது என்று கூறி சிறையிலடைக்க மறுத்து விட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பலரும் சட்ட வரம்புகளை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க...