கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன.

தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641

நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/-

ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி:

ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

பெரியார் முழக்கம் 02012020 இதழ்

You may also like...