கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது.

பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’.

தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது.

தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து வெளிவர சந்தா சேர்ப்பு இயக்கத்தைத் துரிதப்படுத்துங்கள்!

பெரியார் முழக்கம் 09012020 இதழ்

You may also like...