திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை
திருவள்ளுவர் இலக்கியப் பேரவை மற்றும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில், திண்டுக்கல்லில் அரசின் ஆணையிருந்தும் 20 ஆண்டுகளாகத் திறக்க முடியாமல் முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே நிறுவிட அரசின் ஒப்புதலை வேண்டி, 13.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் பெரியார் சரவணன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோவை இராமகிருட்டிணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி) உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 26122019 இதழ்