இஸ்லாமியருக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

பா.ஜ.க. நடுவண் ஆட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டங்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கருத்தியல் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தத்துவத்தை உருவாக்கித் தந்தவரும் அந்த அமைப்புக்கு தலைமை யேற்று வழி நடத்தியவருமான சித்பவன் பார்ப்பனர் வலியுறுத்திய கருத்து தான் இந்த சட்டங் களுக்கான பின்னணி.

“இந்துஸ்தானில் வாழக்கூடிய அனைவரும் இந்துக்கள். அவர்களுக்கான இனத்தின் அடையாளம் இந்தியர் அல்ல; இந்து என்பது தான். இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினர் அனைவரும் அன்னியர்கள். அவர்கள் இந்துஸ்தான் என்ற பாரத தேசத்தில் வாழ வேண்டுமானால் இந்து கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்; அதற்கு  அடிபணிய வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற மத அன்னியர்கள் தங்களுக்கான தனித்த அடை யாளங்களை இழந்துவிட வேண்டும். இந்துக்கள் பெருமையை மட்டுமே பேச வேண்டும். இதை ஏற்க மறுக்கும் இந்துக்கள் அல்லாத வர்களுக்கு ‘குடியுரிமை’ கூட வழங்கக் கூடாது என்று கோல்வாக்கர் – “நாம் அல்லது நமக்கான தேசத்தின் வரையறை (We or Our Nationhood Defined) என்ற நூலில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

“The foreign races of Hindustan must either adopt the Hindu Culture and language; must learn to respect and hold in reverance Hindu Religion” என்று எழுதியதோடு அவர்கள் தங்களுக்கான தனி அடையாள உரிமைகளை இழந்தே தீரவேண்டும் (They must lose their seperate existance) என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். அவர்கள் தங்களுக்கான உரிமைகiளையோ, முன்னுரிமையோ கோர முடியாது என்பதோடு குடியுரிமை கோரவும் உரிமை இல்லை. (They may stay in the country, wholly subordinated to the Hindu Nation, claiming nothing, deserving no privileges; far less any preferential treatment – not even citizen’s rights)  (மேற்குறிப்பிட்ட நூலின் பக்கம் 47-48)

இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கூட வழங்கக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். பிதாமகர் கோல்வாக்கர் கருத்துக்கு தரப்பட்டுள்ள சட்ட வடிவம்தான் குடியுரிமை திருத்தச் சட்டம்.

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...