குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

NRC – CAA பற்றிய ஆய்வரங்க நிகழ்வு 31.12.2019 அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி BJP, RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையாட்டங்களையும், அவர்களின் சதித் திட்டங்களையும் CAA, NRC சட்டத்தின் அபாயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கி நீண்ட உரையாற்றினார். இந்நிகழ்வில் விசிக வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், த.ஒ.வி.இ. துணைச் செயலாளர் செவ்வேள், திக மண்டல செயலாளர் சடகோபன் ஆகியோர் உரையாற்றினர்.  பல்வேறு தோழமை அமைப்புகளின் தோழர்கள், பொது மக்கள், பெண்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். முழக்கம் எழுப்பபட்டது. பின்பு பெரும் திரளாக தோழர்கள் ஒன்றுதிரண்டு ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் அரங்கம் வரை சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை வேலூர் மாவட்ட கழகத் தோழர்கள் செய்தனர்.

கழகத் தலைவர் உரை காண சொடுக்கவும்

பெரியார் முழக்கம் 09012020 இதழ்

You may also like...