Category: பெரியார் முழக்கம்

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் மடத்துக்குளம் சூர்யா மகாலில் மடத்துக்குளம் மோகன் அரங்கில் மே 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் மே 21ஆம் தேதி காலை 9:30க்கு தோழர்கள் அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்து பயிலரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து தோழர்களை வரவேற்று கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் உரையாற்றினார். முதல் வகுப்பு காலை 10.00 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வாக பிற்பகல் 12.15 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் சிவகாமி “கடவுள் மறுப்பு தத்துவம்” என்னும் தலைப்பிலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அமர்வாக மாலை 03.15 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் “திராவிடர் இயக்க வரலாறு” எனும் தலைப்பில் வகுப்புகள் எடுத்தனர். நான்காம் அமர்வாக இரவு 07.00...

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

காசாவில் கூடாரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்களின் மீது நேரடியாக குண்டு வீசி படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். குண்டு வீச்சினால் கூடாரங்களில் தீப்பிடித்ததால் அங்கி ருந்த மக்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். அதோடு பல குழந்தைகள் தலைசிதறி பலியான கொடூரத்தை கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. காசா மீதான போர் மற்றும் அங்கு இஸ்ரேல் நடத்திடும் கொடூர நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் மே 24 அன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் கூட இஸ்ரேல் ராணுவம் ஒரு நாள் கூட போர் நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக பாலஸ்தீன மக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் ரஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் சில வாரங்களுக்கு முன்பு தரைவழித் தாக்கு தல்களை துவங்கியது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களும், சில ஆதரவு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. இது ரஃபா பகுதியில்...

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலையில் அங்கபிரதிஷ்டம் செய்வது குற்றமல்ல, அது 500 ஆண்டுகால சடங்கு, மகாபாரதத்திலேயே இதுகுறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதை யாரும் தடைசெய்யமுடியாது என்று புரட்சிகரமான தீர்ப்பை வழ்ங்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். நாம் வணங்கும் கடவுள் கூட பிராமண எச்சில் இலை என்று சொன்னால் அதை உடனே ஏற்றுக்கொண்டு பக்தனின் கோரிக்கையை உடனடியாக தீர்த்துவைத்துவிடுவார்கள். ஆனால் சூத்திரன் எச்சில் இலை என்றால் மட்டும் அது தெய்வ குத்தம் ஆகிவிடும். இப்படி பிராமணர்களே ஒரு சடங்கை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு இப்போது சட்டமும் துணையாக வந்துநிற்கிறது. பிராமணர்களுக்கும் போஜனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன. பிராமண போஜன விருந்து போட்டால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்று அந்த காலத்தில் பிராமண போஜனங்கள் நடந்தன. பெரியாரின் தந்தை கூட அப்படி பிராமண போஜனம் நடத்தியவர் தான். அந்த போஜன விருந்திற்கு ஒரு மோசடி பார்ப்பான் வந்தான். ஊரை ஏமாற்றிய அந்த...

மனிதமே முதலில்….

மனிதமே முதலில்….

1936ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்கு பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டார் அண்ணா. அண்ணாவுக்கு ஓட்டு போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியது ஜெயபாரதம் ஏடு. அதற்கு அண்ணா, “நகரின் சேரிகள் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. முதலில் அவைகளுக்கு விளக்கு போட வேண்டும். அதற்குப் பிறகு பணமும் நேரமும் மிச்சமிருந்தால் ஆலயங்களில் விளக்கு எரியும். நண்டும் நட்டுவாக்கிளியும் கடித்துத் துன்பப்படும் சேரி மக்களுக்கு விளக்கு போடாமல் ஆலயங்களுக்குப் போட்டுப் பயனில்லை” என்று பதில் கொடுத்தார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்று சிலர் கூற, உங்கள் ஓட்டு எனக்குத் தேவையே இல்லை என்று கூறிவிட்டார் அண்ணா. பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

ஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார். எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாடுகளின் கல்வி வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவற்றை நேரில் ஆய்வுசெய்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக நார்வே நாட்டில், பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக (The New Western Norway University) நூலகத்தைப் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். நார்வே நாட்டு ஆசிரியப் பெருமக்களை நமது தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சியில் வரலாற்றைத் திரித்து, புராண இதிகாச குப்பைகளைப் பாடத்திட்டங்களில் சேர்க்கும் மோசடியான செயல்கள் சில வடமாநிலங்களில் அரங்கேறும் சூழலில், கல்வி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நார்வே நாட்டுடன் தமிழ்நாடு அரசு அறிவுசார் பரிமாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் பாராட்டுதலுக்குரியது. உலகின் மிகச்சிறந்த கல்வி கட்டமைப்புகளைக் கொண்ட...

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியப் பணிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த “பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்” புதுப்பொலிவு பெற்று வருவது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உட்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 98% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேலும், இரண்டாம் கட்டமாக 2022-2023ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 99% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில்...

நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம்

நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரசியல் சாசன பணிகள் மற்றும் நீதிபதி பணியின் செயல்பாடுகள் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கழகத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மற்ற சமூகத்தினர் உருள விதிக்கப்பட்ட தடையை ஜி.ஆர்.சாமிநாதன் நீக்கியதை ஒட்டி, அவர்மீது நடவடிக்கைகோரி அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசியலமைப்பு தனக்கு தந்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வழங்கிய தீர்ப்பு என்பது நீதித் துறையின் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நோக்கங்களுடன் பொருந்திப் போகவில்லை. தலித் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.வேலுமணி அடங்கிய அமர்வு 28.04.2015ஆம் ஆண்டு ( வழக்கு எண் 7068/2015) தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலைகள் மீது பக்தர்கள் உருளுவது என்பது மனித மாண்புக்கும், நாகரீக சமூகத்திற்கும் எதிரானது என்பதால் அதற்கு தடை...

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

• சேலம் கிழக்கு மாவட்டக் கழக அமைப்பாளர் ஏற்காடு பெருமாளின் மகன் ஈழப் பிரபாகரன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 402/500 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சிடைந்திருக்கிறார். அதன் மகிழ்வாக கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கியுள்ளார் ஏற்காடு பெருமாள். • கடந்த ஆண்டில் கழகம் நடத்திய “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டில் “ஜாதி மறுப்பு திருமணம்” செய்துகொண்ட ஊடகவியலாளர்கள் காயத்ரி – எழிலரசன் இணையருக்கு பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக, புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு ரூ.1,000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளனர். • வெங்கடேசன், கோவை மாநகரச் செயலாளர் – ரூ.1,000/- • அழகர், மதுரை – ரூ.1,000/- • பெரியார்புக்ஸ்.காம் – ரூ.2000/- மேலும் நன்கொடை மற்றும் சந்தா செலுத்த விரும்புவோர் QR Code-யை பயன்படுத்தி தொகையை செலுத்தலாம். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

பெரம்பூர் விஷால், கழகத்தின் செயல்பாடுகளை இணையம் வழியாக அறிந்து கழகத்தில் இணைய விருப்பப்பட்டு 19.05.2024 அன்று மயிலாப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 21வது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பில் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

மறைந்த கழக செயல்வீரர் தோழர் போரூர் விக்னேஷ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று கழகத் தலைமை அலுவலகத்தில், நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பில் நடைபெற்றது. வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் விக்னேஷ் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், மடிப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் எட்வின் பிரபாகரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

“குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு” விழாவை முன்னிட்டு நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பு 19.05.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு அருண் கோமதி தலைமை தாங்கினார், சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்ற ஊடகவியலாளர் சுகுணா திவாகர் ‘தமிழ்நாட்டின் சுடரொளி சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் இரவிபாரதி ‘தமிழ்ச்சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். காவை அஜித் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஆய்வாளர் பழ.அதியமான், மாவட்டச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்திருக்கிறது. பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19-இன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஜாமீன்...

சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

(சென்னை மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில், 19.05.2024 அன்று நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பில், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் தோழர் இரவிபாரதி ‘தமிழ்ச் சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை) “நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் பத்திரிகை நடத்துவதை நிறுத்த மாட்டேன், ‘குடிஅரசை’ தொடர்ந்து வெளியிட்டு வருவேன். என் கருத்துக்களை எதிர்வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை” என்ற காத்திரமான எழுத்துக்களுடன் இதழியல் களத்திற்கு வந்தவர் பெரியார். லோகோபகாரி, தேசோபகாரி, தேசபிமானி, ஜனாநுகூலன், சுதேச அபிமானி’, சுதேசமித்திரன், மஹாராணி’, கலாதரங்கிணி இதெல்லாம் அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எளிதில் உச்சரிக்கக்கூடியதாக இல்லை. பத்திரிகைகள் தமிழில் வந்தன, ஆனால் அதன் பெயர்கள் தமிழில் இல்லை. காரணம் அப்போது மேட்டுக்குடிகளிடம் மட்டுமே இதழியல் இருந்தது. தமிழ் குடிகளுக்காக இதழ் நடத்த...

யானையின் மதம்

யானையின் மதம்

தெருவில் யானை வருகிறது என்றால் அவ்வளவுதான் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். ஆண், பெண் அனைவரும் வீதிக்கு ஓடிவந்துவிடுவார்கள். யானை மணியோசையுடன் நடந்து செல்லும் அழகே அழகு. அந்த கம்பீரமான யானைகள் இப்போது வாழ்வுரிமைக்கு போராடுகிறதே சார் என்றார் நண்பர் ஒருவர்… உண்மைதான், போர்க்களத்தில் நின்ற யானைகள் இப்போது வாழ்விடங்களை பறிகொடுத்து நிற்கின்றன. கூட்டம் கூட்டமாக சென்று இனப்பெருக்கம் செய்ய வேண்டிய யானைகள் ஏன் பாதைத் தடுமாறுகின்றன. அதற்கு மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் தான் காரணம். இந்தியா முழுவதும் 150 யானை வழிப்பாதைகள் இருப்பதாகவும், அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 வழிப்பாதைகள் இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் வனத்துறை தமிழ்நாட்டில் மொத்தம் 42 வழிப்பாதைகள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட யானை வழிப்பாதைகளை கண்டறியாமல் போய்விட்டதா? என்று தெரியவில்லை. யானைகள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றன. இரத்த அழுத்தம், மன அழுத்தம், கொரோனா, டைபாய்டு,...

தலையங்கம் – உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மோடி!

தலையங்கம் – உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மோடி!

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த பதற்றத்தோடு காணப்படுகிறார் நரேந்திர மோடி. மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? இல்லையா? என்ற பதற்றத்தில், அவர் உதிர்க்கும் வார்த்தைகள் யாவும் உச்சபட்ச வெறுப்புணர்வை வெளிக்காட்டுகின்றன. இசுலாமியர்கள் குறித்து நாடெங்கும் அவதூறாகப் பேசிவிட்டு, கடைசியில் இல்லை என்று மழுப்பிவிட்டார். காங்கிரஸ் – திமுக – ஆம் ஆத்மி – திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து மோடியும் பாஜகவினரும் பேசும் பேச்சுக்கள் அநாகரீகத்தின் உச்சமாய் இருக்கின்றன. வாக்கு அரசியலுக்காக இவ்வாறு பேசுகிறார் என்று வைத்துக்கொண்டால் கூட, வாக்களிக்கும் மக்களையே தரம் தாழ்த்திப் பேசும் அளவுக்கு தற்போது எல்லை மீறிச் சென்றுவிட்டார் மோடி. சில மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பேருந்துப் பயணம் வழங்கப்படுவதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்று மோடி கூறியிருக்கிறார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்தத் திட்டம் ஏற்படுத்தியிருக்கிற...

ஜி.ஆர்.சாமிநாதனின் மூடத்தனமான தீர்ப்பு

ஜி.ஆர்.சாமிநாதனின் மூடத்தனமான தீர்ப்பு

அக்ரஹாரத்தில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பிற ஜாதியினர் உருண்டு தரிசனம் செய்யும் முறையை கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை செய்திருந்தது.. தற்போது இந்த சடங்கு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். இந்த சடங்கு அடிப்படை உரிமை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடக அரசும் எச்சில் இலையில் உருண்டு தரிசனம் செய்யும் முறைக்கு தடை விதித்திருந்தது. இப்போது இந்த மூடத்தனம் தமிழ்நாட்டில் உயிர்ப்பெற்று வருகிறது. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. அது நீதிபதிகளுக்கு தெரிவதில்லை. சுகாதார உரிமையை விட பக்தி உரிமை தான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருதுகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. வாழை இலையில் எச்சில் செல்கிற போது அதில் ஒரு ரசாயனம் உருவாகி அந்த சக்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டு மனித சிந்தனையை மாற்றி அமைக்கிறது என்று...

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2/2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer – I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் உண்மை அறியும் குழு அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகள்: • ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23) , குணா ( 21 ) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். • காவல்துறை தாக்குதலால்...

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் பி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகிய மூவரும் இணைந்து ராகுல்காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் நேரடி விவாதத்தை ஏற்பாடு செய்தனர். அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால் மோடி தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை… ராகுல் : நமஸ்தே.. விவாதத்திற்கு வந்துட்டிங்களே.! சபாஷ்!! மோடி : விவாதமா? அதுக்கெல்லாம் நான் வரல, அப்படினா எனக்கு என்னென்னே தெரியாது. பத்து வருட நாடாளுமன்ற அனுபவத்தில சொல்றேன். நான் எந்த விவாதத்திலாவது பேசிருக்கேனா? சொல்லுங்க பாப்போம். வாய்ப்பில்லை ராஜா, சாரி இளவரசரே..! ராகுல் : அப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க, ஷோ நடத்தவா? மோடி : பயந்துக்கிட்டேனு நெனைச்சு மக்கள் உண்மையை புரிஞ்சுகிட்டாங்கன்னா, நான் விவாதத்துக்கு அஞ்சாத சிங்கம் என்று ஷோ காட்ட வந்துருக்கேன்.. ராகுல் :...

ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?

ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?

மறைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பெரியார்தான் இன்னும் காவிகளை கதற வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், பெரியாருக்கு 12 வயதாக இருக்கும்போதே மறைந்துவிட்ட கால்டுவெலும் தன் பங்குக்கு கதற வைத்துக்கொண்டிருக்கிறார். கால்டுவெல் பெரியாரைப் போல நாத்திகர் இல்லை, பெரியாரைப் போல கடவுள் இல்லவே இல்லை என்று கூறவில்லை. பிறகு ஏன் காவிக்கூட்டம் அவரைக் கண்டு அஞ்சுகிறது என்றால், தனித்துவ ‘தமிழ்’நாட்டுக்கான அடித்தளத்தில் அவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. செத்த மொழி சமஸ்கிருதத்தில் இருந்தே இந்திய மொழிகள் அனைத்தும் உருவானவை என்ற ஆரியக் கற்பிதங்களை உடைத்து, சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நிறுவியவர் கால்டுவெல். கால்டுவெல் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்? உண்மையில் ஆர்.என்.ரவி கூறுவதுபோல இராபர்ட் கால்டுவெல் மதபோதகராகத்தான் சென்னைக்கு வந்திறங்கினார். ஆனால் அதனால்தான் ஆர்.என்.ரவி வகையறாக்களுக்கு கால்டுவெலின் மீது கோபம் என்றால் அது பெரும் நகைப்புக்குரியது. இன்றைக்கும் இந்தியாவில் கிருத்தவர்களின் மக்கள்தொகை என்பது 2.3%-ஆக மட்டுமே உள்ளது. இந்து மதத்தில் இருந்து...

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

1. சஞ்சய், வந்தவாசி – ரூ.1000/- 2. கார்த்திகேயன், திருப்பூர் – ரூ.1000/- 3. அறிவழகன், கடலூர் – ரூ.500/- நன்கொடை மற்றும் சந்தா செலுத்த விரும்புவோர் QR Code-யை பயன்படுத்திக் கொள்ளலாம். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர கழக சார்பில் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாள் : 25.05.2024 சனி நேரம் : மாலை 5 மணி இடம் : தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் சிறப்புரை : கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு : தாராமங்கலம் நகர கழகம் பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

ஈரோடு வடக்கு : கழக பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயமங்கலம் விசு உடல்நலக்குறைவால் 11.05.2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் விசுவின் உடலுக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், இரமேசு மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். குறிப்பு : விஜயமங்கலம் விசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று காலை மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

கழகத் தோழர்கள் கொளத்தூர் சுதா – ராஜா இணையரின் மகன் இரா.சு. கதிரவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496/500 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மாணவர் கதிரவன் கோவிலுக்கு போனதில்லை, வேண்டுதல் வைத்ததில்லை, பாதபூஜை நடத்தவில்லை, சிறப்பு யாக பூஜையில் பங்கேற்கவில்லை ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, தன்னம்பிக்கையோடு படித்து பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் நான்காவது இடம் பிடித்திருக்கிறார். தேர்வில் வென்றதை அடுத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தனது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சேலம் : தாரமங்கலம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 11.05.2024 அன்று பவளத்தானூர் சரவணன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் தலைமை தாங்கினார். பவளத்தானூர் தனசேகர் முன்னிலை வகித்தார். இதில் தாராமங்கலம் நகர கழக சார்பில் மே மாத இறுதிக்குள் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பவளத்தானூர் சரவணன், தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை சேகர், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

தலையங்கம் – தேர்தல் ஆணையத்தை காணவில்லை!

தலையங்கம் – தேர்தல் ஆணையத்தை காணவில்லை!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. முதல்கட்ட தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த நரேந்திர மோடி, ராமர் கோயில் குறித்தோ இசுலாமியர்கள் குறித்தோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரையை தொடங்கிய நாளில் இருந்தே மத வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி, “நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தையும், சொத்துக்களையும் ஊடுருவல்காரர்களுக்கு, அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மங்கள சூத்திரத்தைக் கூட அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்” என்றும், “இறந்த பிறகும் ஒருவருக்கு வரி விதிக்க காங்கிரஸ் கட்சியிடம் திட்டம் உள்ளது” என்றும் பேசினார். கர்நாடக மாநிலம் கலபுர்கியில் பேசும்போது, “ராமர் கோயில் நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் கூட பங்குகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார். நவாப்களின்...

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காலை நேரத்தில் புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இக்கொலை நடந்தது. தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திரசிங் தவாடேவை 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது. மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட அதே பாணியில் கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) என முற்போக்காளர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு...

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

சேலம் மாவட்டம் மேட்டூர் RS பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சௌந்தர்ராஜனின் தந்தை மாதையன் (74) 07.05.2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார். மறைந்த தோழர் மாதையன் அவர்களின் இறுதி நிகழ்வு மேட்டூர் RS,தேங்கல்வாரை,NSK நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

மேட்டூர் பசரியா மறைவு

மேட்டூர் பசரியா மறைவு

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அம்ஜத் கானின் தாயார் பசரியா 27.04.2024 அன்று முடிவெய்தினார். மறைந்த அம்மையாரின் இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழக சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!

மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பிறகு, அங்கே ராமர் கோயிலை கட்டுவோம் என்று கூறி வடமாநிலங்களில் 30 ஆண்டுகளாக இந்துத்துவ அரசியலில் குளிர்காய்ந்தது பாஜக. ஆனால் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுவிட்டதால், இனி அயோத்தி அரசியல் எடுபடாது என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள். புதிதுப் புதிதாக மசூதியைத் தேடத் தொடங்கிவிட்டார்கள் சங் பரிவார்கள். அவர்கள் இப்போது புதிதாகக் குறி வைத்திருக்கும் மசூதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் அஜ்மெர் மசூதி. கி.பி. 1236-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இம்மசூதி இந்தியாவில் மிகப் பழமையான மசூதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மசூதியை தற்போது பார்வையிட்டுச் சென்றிருக்கும் சங் பரிவார் கும்பல், ஜெயின் கோயிலும், சமஸ்கிருதப் பள்ளியும் அவ்விடத்தில் இருந்ததாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். அங்கே இந்து கடவுள் சிலைகளை கண்டதாகவும், மேலும் பல சிலைகள் அப்பகுதியில் எரிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், அப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த சாகர் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மசூதிக்குள் சென்று வந்த குழுவில்...

ஊழல்… ஊழல்… ஊழல்… பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!

ஊழல்… ஊழல்… ஊழல்… பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக “தி வயர்” இணைய ஊடகத்தில் மே 2-ஆம் தேதி பல்வேறு ஆதாரங்களுடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி, மாவட்ட அலுவலங்கள் கட்டுவதற்காக 2,661 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. மற்ற அலுவலகங்கள் கட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சி செலவிட்ட தொகை 900 கோடி ரூபாய். மாநில தேர்தல்களுக்காக 16,492 கோடி ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தல்களுக்காக 54,000 கோடி ரூபாயில் இருந்து 87,750 கோடி ரூபாய் வரை பாஜக செலவிட்டிருப்பதாக அந்த கட்டுரை கூறுகிறது. ஒட்டுமொத்தத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை 74,053 கோடி ரூபாயில் இருந்து 107,803 கோடி ரூபாய் வரை இருக்கலாம். இது அந்த கட்சி அறிவித்திருக்கிற மொத்த வருவாயின் மதிப்பை விட 5 முதல் 7 மடங்கு வரை அதிகமாகும்....

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. 02.05.2024 இதழின் தொடர்ச்சி… இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோட்சம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து...

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகோதரி நிவேதா. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 283/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார். சகோதரி நிவேதா அவர்களை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் தோழர்கள் அருண்குமார், இராஜேசு, குமார், எழில், அன்னூர் விஷ்ணு. பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. • 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது. • 2022ஆம் ஆண்டு...

தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!

தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!

சேலம் மாவட்டம் காடையம்பட்டிக்கு அருகில் இருக்கிறது தீவட்டிப்பட்டி கிராமம். இப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களும், அருகே இருக்கிற நாச்சினம்பட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களும் வசிக்கின்றன. இரு கிராமங்களுக்கும் நடுவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை ஒட்டி, மே 1-ஆம் தேதி இரவு உள்ளே சென்று வழிபடச் சென்ற பட்டியல் சமூகத்தினரை ஆதிக்க ஜாதியினர் தடுத்திருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மே 2-ஆம் தேதி வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் எட்டப்படாத நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த பட்டியல் சமூகத்தினர் மீது சிலர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அருகில் இருந்த கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இருதரப்பிலும் காவல்துறை சிலரைக் கைது செய்திருக்கிறது. தீவட்டிப்பட்டி பகுதியில் இருக்கும்...

‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி பெரியாரின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி

‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி பெரியாரின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை பெற்று விட்ட பிறகும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரை நோக்கி ‘கோட்டா ஜாதி’ என்று இழிவுபடுத்தும் போக்கை இன்னும் பார்ப்பனர்கள் விட்டுவிடவில்லை. இச்சூழலில் ‘மெரிட்’ குறித்து ராகுல் காந்தி அளித்திருக்கும் மிக எளிமையான விளக்கம் சமூகநீதியின்பால் அவர் கொண்டிருக்கும் அக்கறையை வெளிகாட்டுவதாய் உள்ளது. இடஒதுக்கீடு ஏன் அவசியம்? ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம்? கல்வி உரிமைகள் – மாநில உரிமைகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் தமிழ்நாட்டின் பார்வையில், குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் பார்வையில் மிகத் தெளிவாக, ஆழமான கருத்துக்களை கடந்த காலங்களில் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, இப்போது ‘மெரிட்’ குறித்து அளித்திருக்கும் விளக்கம் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தி சமீபத்தில் பேசியிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியும், அதற்கு அளித்த பதிலும்… கேள்வி: மெரிட் என்றால் என்ன...

தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!

தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!

திருமணத்தின் போது அக்னி குண்டத்தை 7 முறை சுற்றி வராததால், தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி தம்பதி ஒன்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்து திருமண முறைப்படி 7 முறை அக்னி குண்டத்தை சுற்றி வர வேண்டியது அவசியம், அப்படி சுற்றி வராத திருமணங்கள் பதிவு செய்யப்பட்டாலும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகுமா? ஆகாதா என்ற விவாதங்கள் வலுத்தன. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் விவரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகின்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் விளக்கியிருக்கிறார். அதில் இருந்து சுருக்கமானப் பகுதியைக் காணலாம். 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்துக்களுக்கான திருமண வாரிசு...

நஞ்சு விதைக்கும் மாதவி!

நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார். இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி. அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி. வசதி...

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

பெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மாயவரத்தில் பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடும் பேசுவதாக அறிந்த பாரதிதாசன் ஒரு காங்கிரசுக்காரராக – சைவ பக்திமானாக அக்கூட்டத்திற்குச் சென்று மாற்றம் பெற்று அன்றோடு கடவுள், மதம் ஆகியவற்றைப் பாடுவதை விட்டுவிட முடிவெடுத்துக் கொண்டார். எதையும் ஏன், எதற்கு என்று பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து தனக்கு சரியெனப்பட்டதை ஏற்றுக் கொள்க என்று பெரியார் கூறியது கவிஞருக்கு மிகவும் பிடித்தது. அதிலிருந்து பெரியார் கொள்கையை தனது பாடல்களின் கருப்பொருளாக பயன்படுத்தி பாடல்களை எழுதினார். 1928 இல் கருத்தடைப் பற்றி முதன் முதலாகப் பெரியார் கூறியதை 1936 இல் ‘காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ எனப் பாட்டால் வழி மொழிந்த முதற் கவிஞர்...

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு...

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இரண்டு நாள் கோடைக்கால பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. நாள் : மே 21,22 ஆகிய தேதிகளில் இடம் : சூரியா மகால், பழனி ரோடு, மடத்துக்குளம் குறிப்பு : இந்த பயிலரங்கில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத் தோழர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முன்பதிவு கட்டாயம். கட்டணம் ரூ.100/- முன்பதிவுக்கு : 9942645497, 9842248174, 9442837666, 7373561014, 9842487766 பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

சென்னை : மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராக பணிபுரியும் அ.வா.தேவேந்திரன் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த, மயிலாடுதுறை அறம் குழந்தைகள் சிகிச்சையக இயக்குநர் இராம.ஜெனிஃபர் (எ) நிஷா அவர்களுக்கும் ஜாதி – மத மறுப்புத் திருமணம் 14.04.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. இணையேற்பு விழாவுக்கு தலைமைத் தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையேற்பை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்வில் இயக்குநர் கோபி நயினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

சென்னை : வாழ்க்கையை கொள்கையாக்குவோம்! கொள்கையை சமூகமாக்குவோம்!! என்ற இலட்சிய வேட்கையோடு களப்பணியாற்றிய செயல்வீரர் பத்ரி நாராயணனின் 20வது நினைவுநாளை ஒட்டி மயிலாப்பூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழக சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, விசிக மண்டலச் செயலாளர் ரூதர் கார்த்திக், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் வெங்கடேசன், கழக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராயப்பேட்டை வி.எம் தெரு பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பத்ரி அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து அவருடன் பயணித்த கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், விசிக மைய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சாரநாத்,...

தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

உலக வரலாற்றில் அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங்கள் ஏராளம் உண்டு. நாட்டை மீட்க, எல்லையை மீட்க அல்லது நாட்டை பிரிக்க என மண் சார்ந்த போராட்டங்களே அவற்றில் பெரிதினும் பெரிதாக உள்ளன. அமெரிக்காவில் கருப்பர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் அல்லாதவர்களை அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தில் இருந்து விலக்கி வைத்த நிறவெறிக்கொள்கைக்கு எதிரான போராட்டம் போன்ற நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களும் உலக வரலாற்றில் உண்டு. ஆனால் இவை பேசப்பட்ட அளவுக்கு, உலக வரலாற்றில் பேசப்படாத மற்றொரு போராட்டம் உண்டென்றால் அது பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டமே. பிறப்பின் அடிப்படையிலான இன இழிவை நீக்க பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் கண்டதன் நூற்றாண்டு இவ்வாண்டு நவம்பரில் தொடங்கவிருக்கிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரியார் சுயமரியாதை மீட்புக்கான போராட்டத்தை தொடங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் 1920 நெல்லை மாநாடு, 1921 தஞ்சை மண்டல மாநாடு, திருப்பூர் மாகாண மாநாடு,...

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ஜிஎஸ்டி குறித்து பாஜகவினரிடம் கேள்வி எழுப்பிய திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் சங்கீதா மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் சின்னச்சாமி, சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்குப்பதிவான நிலையில் தலை மறைவான குற்றவாளிகள் முன்பிணைக் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 29.04.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.‌ பாதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு ஆதரவாக கழக வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இருப்பினும் குற்றவாளிகளான பாஜக நிர்வாகிகளுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியதோடு, திருப்பூர் மாநகர அமைப்பாளர் சங்கீதா மீது பொய் வழக்கினை பதிவு செய்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர்...

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. பாகுபாடுகள் அகற்றப்படாத வரையில், இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க வேண்டும். தேவை இருக்கும் வரை இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டுமென்று மோகன் பகவத் ஏற்கெனவே பேசிய காணொளி ஒன்று, தற்போது தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதிலளித்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.சி.,, எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக என்றைக்கும் ஆதரிக்கும். அவர்களின் உரிமையை என்றைக்கும் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டுமே கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் 2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஊடகத்திற்கு பேட்டி அளித்த...

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வு

எதிர்வரும் நிகழ்வு

இயக்கத்தின் கருப்பு மெழுகுவர்த்தி, கழக செயல்வீரர் தோழர் பத்ரி நாராயணன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது எனவே தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இரா.உமாபதி மாவட்டச் செயலாளர் – சென்னை திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு...