பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்
பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு ! 06.03.2021 அன்று திருப்பூரில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அரசு அதிகாரிகளுக்கு இது தெரியாததல்ல. தொடர்ந்து தெரிந்தே இத்தவறை செய்து வருகிறார்கள். தேர்தல் நடைத்தை விதிகள் என்று கூறிக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு பெரியார் சிலைகளை அரசு அதிகாரிகள் மூடுவதும், தோழர்கள் நீதிமன்ற தீர்ப்பை காட்டியபின் திரையை நீக்குவதும் என அரசு அதிகாரிகள் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தெரிந்தே இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் ? மக்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு காவி தீவிரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த அதிகாரிகள் அறியாமல்...
