தமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை
தமிழ்நாட்டில் மத்திய அரசின் 48 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கே இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாயம். சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்புக்கு செல்ல முடியும். அது மட்டுமல்ல, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழைப் பாட மொழியாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஏற்று படிக்கவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாக கற்பிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறினார். தமிழ் ஏன் விருப்பப் பாடமாக இருக்க வேண்டும்? பிரெஞ்சு, ஜெர்மன், வங்காளம் உள்ளிட்ட மொழி களைக் கற்கலாம். தமிழ் மொழியை கற்கக் கூடாதா என்று நீதிபதிகளே கேட்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்க மாட்டோம்; இந்தி ஆசிரிர்களை நியமிக்க மாட்டோம் என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்டுள்ளார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்களே நியமிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.