சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்
தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான் அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று...
